ரஃபேல் தீர்ப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலம்: அமித் ஷா

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது என்று பி.ஜே.பி தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2018, 06:34 PM IST
ரஃபேல் தீர்ப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலம்: அமித் ஷா title=

‘ரபேல்’ போர் விமானங்களை வாங்கியத்தில் மோடி தலைமையிலான அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது. இந்தநிலையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த வந்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ‘ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானது தான். இது நாட்டிற்கு தேவையானது. மேலும் போர்விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. எனவே ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கருதுகிறது. எனவே ‘ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கியதை குறித்து விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுக்குறித்து பிஜேபி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

இந்தநிலையில், ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பபை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உச்சநீதிமன்றத்தால் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எந்த அடிப்படையில் அரசாங்கத்தின் மீது ஊழல் குற்றம் சாட்டினார்? இந்த இடத்தில் தவறு நடந்துள்ளது? எதை வைத்து தொடர்ந்து அரசு மீது பொய்யான பழியை சுமத்தினார்? அவரின் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பொய்கள் கூறிவரும் ராகுல் காந்தி அல்ல... ராகுல் காந்தி அல்ல... நான் என இரண்டு முறை கூறினார். நான் உண்மையானவன். உண்மையை மட்டும் பேசுபவன்.

இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொய்யை வென்றுள்ளது. ராகுல் காந்தி ஒரு பொய்யின் அடிப்படையில் நாட்டின் மக்களை தவறாக வழிநடத்த முயன்றதாக அவர் கூறினார். விமானத்தின் தரம் குறித்து எந்தவொரு கேள்வியையும் உச்ச நீதிமன்றம் எழுப்பவில்லை. ரபேல் டீல் தாமதமாக காங்கிரஸ் தான் காரணம். அதற்கு நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் எல்லா ஒப்பந்தங்களிலும் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, ஊழல் செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சித்து வந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது என்று பி.ஜே.பி தலைவர் அமித் ஷா கூறினார்.

Trending News