காதலியுடன் ஜாலியாக வாழ... மனைவிக்கு HIV ரத்தத்தை ஊசி போட்ட கணவர்

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற உரிய காரணம் வேண்டும் என்பதால், அவருக்கு ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2022, 05:09 PM IST
  • அந்த பெண் தற்போது ஹெச்ஐவி தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • 21 வயது பெண்ணுடன் அவரின் கணவருக்கு திருமணத்தை தாண்டிய உறவு உள்ளது.
காதலியுடன் ஜாலியாக வாழ... மனைவிக்கு HIV ரத்தத்தை ஊசி போட்ட கணவர் title=

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மீது அவரின் மனைவி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். 

தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனக்கு ஹெச்ஐவி வைரஸ் நோய் ஏற்பட்டதிற்கு கணவரின் சதிச்செயல்தான் காரணம் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ளவதற்கு எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் தனக்கு செலுத்தினார் என்றும், அதில் இருந்துதான் தனக்கு ஹெச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அந்த பாதிக்கப்பட்டுள்ள பெண் குறிப்பிட்டுள்ளார். 

சரணுக்கும் அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியினர் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் இருவருக்கிடையிலும் பல பிணக்குகள் ஏற்பட்டுள்ளன. போதிய வரதட்சணையை அந்த பெண்ணின் குடும்பம் தரவில்லை என சரண் பல சித்ரவதைகள் அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளார். மேலும், தனக்கு ஆண் குழந்தை பெற்றுகொடுக்கவில்லை என்று கூறியும் கொடுமை செய்து வந்துள்ளார். 

மேலும் படிக்க | வட்டி கட்டாததால் பாலியல் வன்புணர்வு... ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

சரணுக்கு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக தெரிவிக்கும் அந்த பெண், அதற்க பிறகே தன்னை சித்ரவதை செய்ய ஆரம்பித்ததாகவும், தன்னிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். 

தொடர்ந்து, சமீபத்தில் மருத்துவமனையில் மேற்கொண்ட ஒரு மருத்துவ பரிசோதனையில்தான் தனக்கு ஹெச்ஐவி இருப்பதை அறிந்துகொண்டதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கணவர் சரணிடம் கூறியபோது, அதற்கு அவர்,"கர்ப்பம் தரித்தபோது உனக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம்" என சமாளித்ததாகவும் தெரிவித்தார். 

அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்த நபரை சரணை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற உரிய காரணம் தேவைப்பட்டது என்பதால், ஹெச்ஐவி வைரஸ் தொற்று உள்ள ரத்தத்தை மாதிரியை அவருக்கு  செலுத்தியதாக கணவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. விவாகரத்து காரணம் வேண்டும் என்பதால், வேண்டுமென்ற ஹெச்ஐவியை மனைவியின் உடலில் ஹெச்ஐவி வைரஸ் தொற்றை செலுத்தியுள்ளார்.  

மேலும் படிக்க | பீகார் பாலம் விபத்து அம்பலம்! 5 ஆண்டுகளாக யாருக்காக காத்துக் கொண்டிருந்தது பாலம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News