கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பேரிடர் மீட்பு குழு 35அடி பாலத்தினை கட்டியது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 72-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர்.
கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.
கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலைய சேவைகளை வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
#Kerala: Army built a 35 feet long bridge and rescued 100 people (approx) including children and senior citizens from Malampuzha's Valiyakadu village #KeralaFloods pic.twitter.com/PvY1EHRnZT
— ANI (@ANI) August 16, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் வெள்ள மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவப்படை, கேரளாவின் வலியகாடு கிராமத்திற்கு விரைந்து அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் விதமாக 35 அடி நீளத்திற்கு பாலத்தினை கட்டியுள்ளனர். இந்த பாலத்தின் மூலம் 100-க்கும் அதிகமானனோரை பத்திரமாக ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இச்சம்பவத்தினை அடுத்து ராணுவத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது!