HIV நோயாளிகளால் நடத்தப்படும் ஆசியாவின் முதல் CAFE

ஹெச்ஐவி ஊழியர்களால் நடத்தப்படும் ஆசியாவின் முதல் கஃபே கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 9, 2022, 01:35 PM IST
  • ஹெச்.ஐ.வி ஊழியர்களால் நடத்தப்படும் முதல் கஃபே
  • கொல்கத்தாவில் திறந்தது தன்னார்வ தொண்டு நிறுவனம்
  • ஆசியாவிலேயே முதல் கஃபே என்ற சிறப்பை பெற்றுள்ளது
HIV நோயாளிகளால் நடத்தப்படும் ஆசியாவின் முதல் CAFE title=

எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம். இதனால் அவர்களின் மேம்பாட்டுக்காக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி, சில முன்மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கொல்கத்தாவில் ஹெச்ஐவி ஊழியர்களால் நடத்தப்படும் முதல் கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலின் சிறப்பு என்னவென்றால், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 

மேலும் படிக்க | தலைதூக்கும் கொரோனா, 5 மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் உயர் எச்சரிக்கை

ஆசியாவிலேயே எச்ஐவி பாசிட்டிவ் ஊழியர்களால் நடத்தப்படும் முதல் கஃபே இதுவாகும். இதற்கு 'கஃபே பாசிட்டிவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும் இந்த கஃபே தொடங்கப்பட்டதன் நோக்கமாகும். 

ஆனந்தகர் என்ஜிஓ இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. அரசு சாரா இந்த அமைப்பு ஹெச்ஐவி குறைபாடு கொண்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. அமைப்பின் நிறுவனர் கல்லோல் கோஷ் இது குறித்து பேசும்போது, "இந்த கஃபேவை திறப்பதற்கு பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு ஓட்டல் தான் காரணம். பிராங்பேர்ட்டில் உள்ள சிற்றுண்டிச்சாலை முழுக்க முழுக்க எச்ஐவி நோயாளிகளால் நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | செல்ஃபி மோகத்தால் ரயில் மீது ஏறிய சிறுவன்...மின்சாரம் பாய்ந்து பலியான சோகம்

சிற்றுண்டிச்சாலை காபி மற்றும் சாண்ட்விச்களுக்கு பெயர் பெற்றது. பெரும்பாலான நேரங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தியாவில் இதுபோன்ற 30 கஃபேக்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். கஃபேவில் பணியாற்றுவதற்கு 700 பேரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த ஐடியா ஆரம்பத்தில் வொர்க் ஆகாது என நினைத்ததாக கூறியுள்ளார். ஹெச்ஐவி பயம் இருந்ததாகவும் கல்லோல் கோஷ் கூறியுள்ளார். மக்கள் கூட்டம் வரத் தொடங்கியிருப்பதாகவும், சிலர் ஹெச்ஐவி ஊழியர்கள் என தெரிந்தும் சாப்பிடத் தயங்குவதில்லை, சிலருக்கு தயக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News