அஸ்ஸாம் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படும் -பிஸ்வா சர்மா

அசாமில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் முழுமையாக திரும்ப பெறப்படும் என்றும், இணைய சேவை மீண்டும் அளிக்கப்படும் என்றும் அசாம் நிதி அமைச்சரும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 17, 2019, 10:01 AM IST
  • ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது.
  • அஸ்ஸாம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பகல் நேரத்தில் மட்டுமே தளர்த்தப்படும் என்றும், அரசாங்கத்தால் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் வரை அது இரவில் இருக்கும்.
அஸ்ஸாம் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படும் -பிஸ்வா சர்மா title=

அசாமில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் முழுமையாக திரும்ப பெறப்படும் என்றும், இணைய சேவை மீண்டும் அளிக்கப்படும் என்றும் அசாம் நிதி அமைச்சரும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில், அசாமில் மொபைல் இணையம் இடைநிறுத்தப்படும் என்று சர்மா முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் செவ்வாய் முதல் தடுக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டம் மற்றும் ஒழுங்கு ADG, GP சிங் இதுகுறித்து தெரிவிக்கையில், மாநிலத்தில் இயல்புநிலையை மீண்டும் திரும்பிவரும் நிலையில் டிசம்பர் 17 காலை 6.00 மணி முதல் இணைய சேவைகள் திரும்பளிக்கப்படுகிறது. மேலும் இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக திப்ருகார் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக திங்களன்று, அஸ்ஸாம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பகல் நேரத்தில் மட்டுமே தளர்த்தப்படும் என்றும், அரசாங்கத்தால் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் வரை அது இரவில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதுதொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "குவஹாத்தியில் நாங்கள் ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுள்ளோம், இப்போது பகல் நேரத்தில் ஊரடங்கு உத்தரவு இருக்காது. இருப்பினும், நிலைமையை மறுபரிசீலனை செய்து இது குறித்து முடிவெடுக்கும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்." என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததில் இருந்து சுமார் 136 காழ்ப்புணர்ச்சி மற்றும் பிற தொடர்புடைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்மா குறிப்பிட்டுள்ளார். மேலும் குவஹாத்தியிலும் முழு மாநிலத்திலும் இதுவரை நடந்த சம்பவங்கள் தொடர்பாக 190 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்., "குவஹாத்தி கும்பல் வன்முறையில், நாங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கண்டிருக்கிறோம். இந்த கும்பல் வன்முறையில் குவாஹாத்தியின் குடிமக்கள் அல்லாத, மற்றும் பலரின் பெரும்பான்மை காணப்பட்டது. இவர்கள் கீழ் அசாமின் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்திருந்தார்களா அல்லது அவர்கள் சில குழுவினரால் இங்கு கொண்டு வரப்பட்டார்களா என்பது இன்னும் அரசாங்கத்தால் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஓரிரு நாட்களில் முறையான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணையில் அறியப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நவம்பர் 11-ஆம் தேதி பாராளுமன்றத்தில் குடியுரிமை (திருத்த) மசோதா 2019-னை  நிறைவேற்றியதைத் தொடர்ந்து அசாமின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. நவம்பர் 12 அன்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் குடியுரிமை திருத்த மசோதா, சட்ட வடிவம் பெற்றது. இதனையடுத்து போராட்டங்கள் நாடெங்கிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் ஆனது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News