தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டது.
5 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு (Assembly Election) நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகம் (Tamil Nadu) முழுக்க 1.8 லட்சம் போலீஸ், துணை காவல் படை உட்பட பல்வேறு பாதுகாப்பு படையினர் இதற்காக பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தோடு (TN Assembly Election) சேர்த்து புதுச்சேரி மற்றும் கேரளாவில் (Kerala) இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் (Assam), மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மே 2ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR