சண்டிகர்: ஹரியானாவின் சர்கா தாத்ரியில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, (Narendra Modi) இந்தியாவில் உள்ள ஒரு பகுதியின் நீர் 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சென்று வருவதாக தெரிவித்தார். இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர் 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குச் (Pakistan) சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த மோடி அதைத்தடுத்து அந்த நீரை உங்கள் வீட்டிற்கு கொண்டு வருவார். இது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் இந்த நாட்டின் விவசாயிகளுக்கு உரிமையானது.
பிரதமர் மோடி கூறுகையில், "பாஜக தலைமையிலான அரசு தான் மீண்டும் ஹரியானாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். நான் இரண்டு நாட்களாக ஹரியானாவில் இருக்கிறேன். அங்கு இருக்கும் பாஜக அலையை பார்த்தால் தெளிவாக தெரிகிறது, பாஜக மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் மற்றும் அன்பு காரணமாக மாநிலத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களை மட்டும் வென்று வந்த பாஜக, தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஹரியானாவில் அரசாங்கத்தை அமைக்கும் நிலையை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். இன்று, ஹரியானா மக்கள் தூய்மை, கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள்.
மக்களை பார்த்து, ஹரியானாவில் நான் தேர்தல் கூட்டத்திற்கு வரவில்லை, நான் இங்கு பிரச்சாரம் செய்யவில்லை, இங்கு வாக்குகள் கேட்கவில்லை என்ற பிரதம் மோடி, "ஹரியானா என்னை ஈர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பைக் கொடுத்தீர்கள்". நான் உங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்துருக்கிறேன் என்றார்.