ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்; ஸ்ரீகாந்த் புகழாரம்...

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Updated: Jun 30, 2020, 05:36 PM IST
ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்; ஸ்ரீகாந்த் புகழாரம்...

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா டேடி சதங்கள் (140 ரன்களுடன் ஓர் சதம்) அடிக்கும் திறமை கொண்டவர் எனவும், தான் பார்த்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் எனவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

READ | ரோஹித் ஷர்மாவை தனது விருப்பமான பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார் டுமினி!...

ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார், இதில் மூன்று இரட்டை சதங்களும் அடங்கும்.

தனது விளையாட்டு நாட்களில் ஸ்ரீகாந்த் ஒரு தொடக்க ஆட்டக்காரராக அபரிவிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இக்கால போட்டியாளர்களில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் குறித்து அவர் மனம் திறக்கையில் ரோஹித் சர்மாவை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ரோஹித்துக்கு 3 அல்லது 5 ஆம் இடம் கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "உலக கிரிக்கெட்டில் ரோஹித்தை நான் மிகச்சிறந்த ஒருநாள் தொடக்க வீரர்களில் ஒருவராக மதிப்பிடுவேன். ரோஹித் சர்மாவின் மிகப் பெரிய தரம் என்னவென்றால், அவருடைய மிகப்பெரிய சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள். இது ஆச்சரியமான ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.

READ | ரோகித் ஷர்மாவுக்கு பெண் வேடமிட்டால் எப்படி இருக்கும்...? நீங்களே பாருங்கள்!...

"ஒருநாள் போட்டிகளில் நாம் இப்போது 150, 180, 200 என பெரிய இலக்குகளை எட்டி பயணிக்கின்றோம். சற்று சிந்தித்து பாருங்கள் இதற்கு யார் காரணம் என்று. அதுதான் ரோஹித்தின் பெருமை" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் தகவலுக்கு : 30 வயதாகும் ரோஹித் இதுவரை 224 ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார், சராசரியாக 49.27 விகிதத்தில் 9115 ரன்கள் எடுத்துள்ளார். இதில்  29 சதங்கள் மற்றும் 43 அரைசதங்கள் அடங்கும். இவரது அதிக ஒருநாள் ரன் 264 ஆகும், இது உலக சாதனையும் கூட 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2141 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.