புதுடெல்லி: தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26ஆம் தேதியன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
எனவே, இன்று நாடு முழுவதும் வர்த்தக சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். சரக்கு மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்துகள் இயங்காது.
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எதிராக வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றின் உயர்வால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு (CAIT) அழைப்பு விடுத்துள்ளது.
Millions of traders, transporters and tax professionals supported by over 40,000 organisations have united to make tomorrow’s #BharatBandh & #chakkajaam called by @CAITIndia & @aitwa a grand success, to protest against the complexities, anomalies & draconian provisions in #GST pic.twitter.com/jV9D8zSCYp
— Confederation of All India Traders (CAIT) (@CAITIndia) February 25, 2021
அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்ப்பின் அழைப்பை ஏற்று, அனைத்திந்திய போக்குவரத்து நலச்சங்கம் (AITWA), அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) உட்பட 40 ஆயிரம் வர்த்தக சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை இன்று முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Also Read | திமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி
போராட்டத்தின் காரணமாக கடைகள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். சாலை மறியல், கடையடைப்பு போன்றவையும் நடத்தப்படுகின்றன. 2018ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட விதிமுறைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
எரிபொருட்கள் மீதான அதிகப்படியான வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இதன்மூலம் நாடு முழுவதும் ஒரேமாதிரியான எரிபொருள் விலை நிர்ணயம் செய்யலாம். மேலும், ஜிஎஸ்டி சிஸ்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைக்க AITWA அறிவுறுத்தியுள்ளது. இதனால் தனியார் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Also Read | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR