Gold வாங்கினா, அரசு discount கிடைக்கும் தெரியுமா? தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு

தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு...  Gold வாங்கினால் அரசு சலுகையைப் பெறலாம்... நாளை முதல் தொடங்குகிறது இந்த திட்டம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2020, 05:12 PM IST
  • தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு...
  • Gold வாங்கினா, அரசு சலுகை கொடுக்கிறது
  • நாளை முதல் தொடங்குகிறது இந்த திட்டம்...
Gold வாங்கினா, அரசு discount கிடைக்கும் தெரியுமா? தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு  title=

புதுடெல்லி: ஆன்லைனில் தங்கத்தை வாங்கினால் உங்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும், இது தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பதை அறிந்து, பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தங்கத்தின் (Gold) தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தங்க பத்திரங்களை (Gold Bond scheme) அரசு வெளியிடுகிறது. இதற்கு முன்னதாக தங்க பத்திரங்களை வாங்கும் வாப்பை தவற விட்டிருந்தால் இந்த தவணையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

டிசம்பர் 28 முதல் இந்த தங்கப் பத்திரங்களை (Gold Bond scheme) வாங்கி பத்திரமாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை 5000 ரூபாய் (Gold price today) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டின் அரசு தங்கப் பத்திரத் திட்டத்தின் (Gold Bond scheme) 9 வது தொடரில் தங்கப் பத்திரங்கள் வாங்க 2020 டிசம்பர் 28 முதல் 2021 ஜனவரி 1 வரை விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

Also Read | தங்கத்தை வித்தா வருமான வரி கட்டணுமா...!!!

இது மட்டுமல்லாமல், டிஜிட்டல் பயன்முறையைப் பயன்படுத்தி ஆன்லைனில் (online) விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் இந்த தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond) தள்ளுபடியும் கொடுக்கிறது. டிஜிட்டல் மூலம் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை அறிவிப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.  

டிசம்பர் 28ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 28 ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டத்தில், பத்திரத்தின் வெளியீட்டு விலை கிராமுக்கு 5,000 ரூபாய் ஆகும். ஆனால் டிஜிட்டல் மூலம் சலுகை பெறும் முதலீட்டாளர்கள் ரூ .4,950 க்கு பத்திரம் வாங்கலாம்.  

8 ஆண்டுகளுக்கான தங்கப் பத்திரம் (Gold Bond)

இந்த தங்கப் பத்திரங்கள் 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன, அதோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற தெரிவும் உள்ளது. 1 கிராம் முதல் அதாவது குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதலீட்டில் இந்த தங்க பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  

Also Read | Corona Virus தாக்கத்தின் தடைகளை எதிரொலிக்கும் தங்கத்தின் விலை

4 கிலோ வரை தங்கத்தை வாங்கலாம்

ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1 கிராம் மற்றும் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக்குடும்பம் (HUF) குடும்பத்திற்கு 4 கிலோ வரை மற்றும் அறக்கட்டளைகள் 20 கிலோ வரை தங்க பத்திரம் (Gold Bond) வாங்குவதற்காக முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

Sovereign தங்கப் பத்திர திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இத்திட்டம் நவம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது. ஆபரண தங்கத்திற்கான தேவையை குறைப்பதற்கும், தங்கம் வாங்கும் பணம், முறைப்படி முதலீடாக பயன்படுத்துவதும் இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும்.   

Also Read | மலிவான விலையில் தங்கத்தை வாங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் மத்திய அரசு..!!!

1.கடைக்கு சென்று ஆபரணமாகவோ, தங்கமாகவோ வாங்குவதற்கு
2.Sovereign  தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு (Gold Bond) செய்யலாம். இதில் ஒருவர் வணிக ஆண்டில் 500 கிராம் வரையில் தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
3.குறைந்தபட்ச முதலீடு ஒரு கிராம்.
4.எந்தவொரு நபரும் அல்லது HUF ஒரு வணிக ஆண்டில் அதிகபட்சம் 4 கிலோ கிராம் தங்கப் பத்திரத்தை வாங்கலாம்.
5.ஒட்டுமொத்தமாக, தனித்தனியாக பத்திரங்களை வாங்குவதற்கான வரம்பு 4 கிலோ.
6.அறக்கட்டளை அல்லது அமைப்பு 20 கிலோ தங்கத்திற்கு இணையான தொகையை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 
7.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள்.
8.எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த தங்க பத்திரங்களை விற்க விரும்பினால், நீங்கள் குறைந்தது 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
9. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்க முடியும்.
10. இத்திட்டத்தின் கீழ், முதலீட்டிற்கு 2.5 சதவீத வட்டி கொடுக்கப்படும்.

Also Read | தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? அப்போ இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News