Gold prices: Corona Virus தாக்கத்தின் தடைகளை எதிரொலிக்கும் தங்கத்தின் விலை

திங்களன்று தங்கத்தின் விலை உயர்ந்தது, தங்கத்தின் விலையில் தினசரி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவும்  அதே நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், புதிய தடைகள் அமல்படுத்துவதன் எதிரொலி தங்கத்தில் பிரதிபலிக்கிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2020, 01:57 AM IST
Gold prices: Corona Virus தாக்கத்தின் தடைகளை எதிரொலிக்கும் தங்கத்தின் விலை title=

புதுடெல்லி: திங்களன்று தங்கத்தின் விலை உயர்ந்தது, தங்கத்தின் விலையில் தினசரி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவும்  அதே நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், புதிய தடைகள் அமல்படுத்துவதன் எதிரொலி தங்கத்தில் பிரதிபலிக்கிறது.

உலகளவில் விரைவான பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையைத் தூண்டுவதாக கொரொனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கும் என்றும், அப்போது தங்கத்தின் விலை உயர்வு மட்டுப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.  ஆனால், அமெரிக்காவில் இந்த வாரம் பெடரல் ரிசர்வ், எம்.பிக்களின் உரைகளில் கவனம் செலுத்துகின்றது. இனி எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஊஞ்சலில் அமர்ந்து மேலும் கீழுமாக ஆடப்போகிறது. அது எப்போது நிலை பெறும் என்பதை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.

சரி, இந்தியாவில் தங்கத்தை வாங்குபவர்களின் நிலை என்ன?   விலையுயர்ந்த உலோகமான பொன் எப்போது பெண்ணாக மனம் மாறும் என்று காத்துக் கொண்டிருங்கள். ஹி...ஹி... பொன்னின் மனம் கனிவது என்றால் விலை வீழ்ச்சிக்குக் காத்திருங்கள் என்று பொருள் கொள்ளலாம். விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை மாற்றங்கள் உங்கள் பணத்தின் மதிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

தங்கத்தில் முதலீடு செய்வதன் சில அம்சங்கள்:

  • சர்வதேச சந்தையில் தங்கம் கடந்த ஆண்டு தோராயமாக ஒன்பது சதவிகித லாபத்தைக் கொடுத்தது.
  • உங்களால் தங்கத்தில் நீண்ட கால முதலீட்டை வைக்க முடியும் என்றால் கவலைப்படாமல் தங்கத்தை வாங்கி பரணியில் போட்டு வையுங்கள். 
  • தங்கத்தை பொன்னாக சேமித்தால் தேவையற்ற பாதுகாப்புத் தொல்லை என்று நினைத்தால் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். 

இந்தியாவில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளில் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இவை உங்களுக்கு 2.75 சதவிகித வட்டியைக் கொடுக்கும். இந்த வட்டி விகித்த்தை  அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும். Stock Holding Corporation மற்றும் தபால் நிலையத்தின் அலுவலகங்களிலும் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். 

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • தங்கப் பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும்.
  • தங்கப் பத்திரங்கள் மூலதன வருவாய் கொடுக்கும் என்பதோடு வழக்கமான வட்டியையும் கொடுக்கிறது. 
  • தங்கப் பத்திரங்களைப் பணமாக்குவதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் உடனடியாக விற்க முடியாது. குறிப்பாக, இந்தப் பத்திரங்களைப் மிகப் பெரிய அளவுகளில் விற்க முடியாது.
  • தங்கப் பத்திரங்கள் என்எஸ்ஈ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  
  • தங்கப் பத்திரங்களின் வட்டி விகிதம் லாபகரமானது. 
  • தங்கப் பத்திரத் திட்டத்தில் லாக்கிங் காலம் உள்ளது.
  • வரி விலக்கு இல்லாத திட்டம் தங்கப் பத்திரத் திட்டம்.
  • வழக்கமாக பங்குப் பத்திரங்களில் இழப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதுபோல், இதிலும் உண்டு என்றாலும் அது அரிதிலும் அரிது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News