பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகிறாரா அமரீந்தர் சிங்?

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 3, 2022, 08:19 PM IST
  • குடியரசு துணைத் தலைவர் வேட்பாளாராகிறாரா அமரீந்தர் சிங்?
  • பாஜக கூட்டணி வேட்பாளராக வாய்ப்பு
  • கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாகத் தகவல்
பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகிறாரா அமரீந்தர் சிங்? title=

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கானத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் வெங்கையா நாயுடு நிறுத்தப்பட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான அமரீந்தர் சிங் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், தனது சொந்தக் கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸைத் தொடங்கினார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.

மேலும் படிக்க | Presidential Election 2022: இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன

தற்போது முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள அமரீந்தர் சிங், நாடு திரும்பிய பிறகு தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் சிங் கிரேவால் தெரிவித்தார். அமரீந்தர் சிங்கை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அமரீந்தர் சிங் தவித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரின் பெயர்களும் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல் : யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News