மேற்குவங்க காவல்துறையை நம்ப வேண்டாம் என BJP EC-க்கு வலியுறுத்தல்!!

மேற்குவங்க மாநிலத்தில் மத்திய படைகளின் கண்காணிப்புடன் மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது!!

Last Updated : Mar 12, 2019, 10:59 AM IST
மேற்குவங்க காவல்துறையை நம்ப வேண்டாம் என BJP EC-க்கு வலியுறுத்தல்!!

மேற்குவங்க மாநிலத்தில் மத்திய படைகளின் கண்காணிப்புடன் மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது!!

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க 18 முதல் 19 வயதுக்குட்பட்டோர் இந்தியாவில் சுமார் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளக்தாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வாக்காளர்களை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டுவதாகவும், மேற்குவங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்றும் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் திரிணாமூல் காங்கிரஸ் மீது மேலும் ஒரு புகாரை பா.ஜ.க. அளிக்கவுள்ளது.

அம்மாநில காவல்துறையை நம்ப வேண்டாம் என்றும், மத்திய படைகள் கண்காணிப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்திடம் இன்று வலியுறுத்துகிறது. மேற்குவங்க மாநிலத்தில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

More Stories

Trending News