மகாராஷ்டிராவில் சிவசேனா நடத்திவரும் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருப்பது:
ஏ.கே.அந்தோணி அவர்கள் ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டார். மேலும் இதை பற்றி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார். சோனியா காந்தியும் மற்றும் மற்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்த தலைவர்களும் ஊழல் செய்திருந்தால் அவர்களுக்குகாண தண்டனை கிடைக்கும் மேலும் அவர்கள் மீது கருணை காட்டுவதற்கு அவசியமும் இல்லை.
நாட்டில் வேலையில்லா பிரச்சனை, ஊழல் மற்றும் கருப்புபண பிரச்சினை போன்றவை தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க தான் பாராதிய ஜனதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் ஊழலில் தேவையில்லாமல் பிரச்சனையை பெரியதாக்கி அக்கட்சி புத்துயிர் பெற உதவுகிறீர்கள்? ஏற்கனவே பீகார் நடந்த சட்டசபை தேர்தலின் முலம் பாடம் கற்றிருக்க வேண்டும். இவ்வாறு சிவசேனா பத்திரிகையில் தெரிவிக்க பட்டுள்ளது.
பாராதிய ஜனதா கூட்டணி கட்சி தான் சிவசேனா என்பதும் குறிப்பிடத்தக்கது.