லக்னோ நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு; மூன்று வழக்கறிஞர்கள் காயம்

லக்னோ நீதிமன்றத்தில் தீடிரென நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் மூன்று வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம்!! 

Last Updated : Feb 13, 2020, 01:42 PM IST
லக்னோ நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு; மூன்று வழக்கறிஞர்கள் காயம்

லக்னோ நீதிமன்றத்தில் தீடிரென நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் மூன்று வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம்!! 

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நீதிமன்றத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் மூன்று வழக்கறிஞர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்பு நிகழ்ந்த லக்னோ நீதின்றத்திற்கு போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டுகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பதற்றம் நீடிக்கிறது. வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

More Stories

Trending News