BSP கட்சியை அடியோடு அழிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது - மாயாவதி!

மத்திய பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை அடியோடு அழிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது என அக்கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2018, 12:19 PM IST
BSP கட்சியை அடியோடு அழிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது - மாயாவதி! title=

மத்திய பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை அடியோடு அழிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது என அக்கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடுகின்றது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக கட்சி தலைவர் மாயாவதி நேற்று துசேரா மைந்தன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...

மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் பகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு மிகுந்த ஆதரவு உள்ளது. இதன் காரணமாகவே இம்மாநிலங்களில் பலம் இழந்து காணப்படும் காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கின்றது. ஆனால் கூட்டணியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட்டது, இது பகுஜன் சமாஜ்வாடி கட்சியை இம்மாநிலத்தில் அழிக்கும் முயற்சியாக தெரிகிறது. எனவே பகுஜன் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவுசெய்து செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியால் பகுஜன் சமாஸ்வாடி கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என குறிப்பிடாத மாயாவதி, தற்போது கூட்டணி உடைந்ததற்கு காங்கிரஸ் தங்களை குற்றம்சாட்டி வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்த பேசிய அவர் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஏழை மக்களை கருத்தில்கொள்ளாமல் ஆளும் வர்கத்தினரின் முன்னேற்றத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் நடத்திவருகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்

  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018
  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018

Trending News