Budget 2022 Auto Sector: வாகனங்களின் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?

Union Budget 2022 for Automotive Industry: ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதமாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 06:33 PM IST
  • பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  • இரு சக்கர வாகனங்கள் ஆடம்பரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை: FADA
  • பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் 5% குறைக்க வெண்டும்: ஆட்டோ தொழில்துறை
Budget 2022 Auto Sector: வாகனங்களின் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன? title=

Budget 2022: மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் 2022 ஐ தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் அனைத்து தொழில்துறைகளுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்னகவே பல வித சிக்கல்களை சந்தித்து வருகின்றது. சிப் பற்றாக்குறை மற்றும் அவ்வப்போது விதிக்கப்படும் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக இந்த தொழில்துறை மந்தமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையை மாற்றக்கூடிய பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்த சில ஆண்டுகளில் அதிவேக முன்னேற்றத்தைக் கண்டு வரும் துறைகளில் வாகன உற்பத்தித் துறையும் (Automobile) ஒன்றாகும். ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதமாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனம் என்பது ஆடம்பரப் பொருள் அல்ல, அத்தியாவசிய பொருள் 

ஆட்டோமொபைல் டீலர்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ), இரு சக்கர வாகனங்கள் ஆடம்பர பொருட்கள் அல்ல, ஆகையால், இவற்றின் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சுமார் 26,500 டீலர்ஷிப்களைக் கொண்ட 15,000-க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் டீலர்களை தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக FADA கூறுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதம் வரை குறைக்குமாறு நிதி அமைச்சகத்திடம் FADA கேட்டுக்கொண்டுள்ளதாக இந்த தொழில்துறை அமைப்பு இந்த வார துவக்கத்தில் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி தவறு 

இரு சக்கர வாகனங்கள் (Two Wheelers) ஆடம்பரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், இவை, சாமானியர்களால் அன்றாட வேலைக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் FADA கூறியது. "ஆகையால், 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இரண்டு சதவீத செஸ் ஆகியவை இரு சக்கர வாகன வகைக்கு பொருந்தாது." என்று FADA மேலும் தெரிவித்துள்ளது. 

ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?

ஜிஎஸ்டி 28% விகிதத்தில் விதிக்கப்படுகிறது

  'மூலப்பொருட்களின் அதிகரிப்பால் வாகனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால், விலை உயர்வை எதிர்கொள்ளவும் தேவையை அதிகரிக்கவும் உதவி கிடைக்கும்.' என்று ஃபாடாவின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவகிறது. இவற்றுக்கு தற்போது ஜிஎஸ்டி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது.

பயன்படுத்திய வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி பொருந்தும்

இது தவிர, அனைத்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் (Used Vehicles) 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர FADA முயற்சிக்கிறது. அவை தற்போது 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்ற விகிதத்தில் விதிக்கப்படுகின்றன.

2022 பட்ஜெட்டில் ஆட்டோ தொழில்துறை எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள் இவை:

1) வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு வாகனங்கள் மீது தேய்மானம் கோருவதன் பலன்களை அறிமுகப்படுத்துதல்

2) வாகனங்களுக்கான தேய்மான விகிதம்

3) தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க GST விகிதங்களை ஒழுங்குபடுத்துதல்

4) பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் 5% குறைப்பு

6) ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்களுக்கான PLI திட்டத்தில் திருத்தம்

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Budget 2022) பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் குடியரசுத் தலைவர் உரை நடைபெறும், அதே நாளில் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News