பட்ஜெட் கூட்டத்தொடர் 2017: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!!

டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் பார்லிமென்ட்டில் நடக்கும் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ளன.

Last Updated : Jan 30, 2017, 11:40 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடர் 2017: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!! title=

புதுடெல்லி: டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் பார்லிமென்ட்டில் நடக்கும் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ளன.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மாலை மாலை அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு ஒத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஏஎன்ஐ தனவளின் படி, இந்த அனைத்து கட்சி கூட்டம் மற்றும் பார்லிமென்ட்டில் நடக்கும் பட்ஜெட் தாக்கலை புறக்கணிக்க போவதாக திரிணமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முதல்வர் மோடி தலைமையிலான மத்திய அரசை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டம் மற்றும் பட்ஜெட் தாக்கலை திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பெரின் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். 

முதல் நாள் அமர்வில் பொருளாதார ஆய்வறிக்கை வழங்கப்படும், அதேசமயம் பொது பட்ஜெட் புதன்கிழமை வழங்கப்படும்.

Trending News