CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தேதியில் அட்மிட் கார்ட் கிடைக்கும்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டை நவம்பர் 9ஆம் தேதி வெளியிடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 05:55 PM IST
CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தேதியில் அட்மிட் கார்ட் கிடைக்கும் title=

CBSE 10th, 12th Exam Latest Update: CBSE நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. இதில், மாணவர்களிடம் முதல் பருவ பொதுத் தேர்வுகளின் OMR தாளை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாளை எவ்வாறு நிரப்புவது என்பதை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் வாரியம் கூறியுள்ளது.

அட்மிட் கார்டு நவம்பர் 9 ஆம் தேதி வழங்கப்படும்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டை நவம்பர் 9ஆம் தேதி வெளியிடுகிறது. அட்மிட் கார்டு வெளியான பிறகு, மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in -க்குச் சென்று இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனுடன், அலுவலக பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் அன்றைய தினம் வாரியத்தால் வெளியிடப்படும்.

இந்த கல்வி ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்படும்

கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, சிபிஎஸ்இ இந்த முறை அதன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளின் வடிவமைப்பை மாற்றியுள்ளது. இந்த முறை சிபிஎஸ்இ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இந்தத் தேர்வுகளின் முதல் பருவம் 2021 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இரண்டாவது பருவத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல் 2022 இல் நடக்கும். இரண்டு பருவத் தேர்வுகளிலும், 50-50% பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் இறுதி முடிவிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ALSO READ: வைரலாகும் CBSE 'Date Sheet' ; CBSE கூறுவது என்ன..!!! 

CBSE டர்ம்-1 அட்டவணையை வெளியிட்டுள்ளது

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் டெர்ம்-1 பொதுத் தேர்வுக்கான (Board Exams) தேதி அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. முதல் பருவத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நவம்பர் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நவம்பர் 16ஆம் தேதியும் (CBSE Class 10 And 12 Term-1 Exam) தொடங்கும்.

எத்தனை பாடங்களில் தேர்வு இருக்கும்?

CBSE 10ஆம் வகுப்பில் மொத்தம் 75 பாடங்களையும், 12ஆம் வகுப்பில் 114 பாடங்களையும் வழங்குகிறது. இந்தப் பாடங்கள் அனைத்துக்கும் தேர்வு வைக்க வேண்டுமானால், 45 முதல் 50 நாட்கள் ஆகும். எனவே, நேர விரயத்தை தடுக்க, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தான் CBSE தேர்வு நடத்தும்.

10 ஆம் வகுப்பின் முக்கிய பாடங்கள் - இந்தி பாடம் A, ஸ்டாண்டர்ட் கணிதம், ஹோம் சயின்ஸ், இந்தி பாடப்பிரிவு B, அறிவியல், சமூக அறிவியல், கணினி பயன்பாடுகள், ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், பேசிக் மேத். 

12 ஆம் வகுப்பின் முக்கிய பாடங்கள் - இந்தி எலக்டிவ், வரலாறு, பொலிடிகல் சயின்ஸ், புவியியல், பொருளாதாரம், உளவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உடற்கல்வி, வணிகப் படிப்பு, கணக்கியல், ஹோம் சயின்ஸ், தகவல் பயிற்சி (Informatics Practice) (புதியது), கணினி அறிவியல் ( புதியது), ஆங்கிலம் கோர், ஹிந்தி கோர்.

ALSO READ:CTET தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டது CBSE 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News