Asteroid: இன்னும் இரு வாரங்களில் பூமியை கடக்கும் பிரம்மாண்ட சிறுகோள்! எச்சரிக்கை!!

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்லும், அது பூமிக்கு நெருக்கமாக வரும் வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரிக்கை!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 03:15 PM IST
  • பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்லவிருக்கிறது
  • 1.052 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள்
  • எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு பெரியது
Asteroid: இன்னும் இரு வாரங்களில் பூமியை கடக்கும் பிரம்மாண்ட சிறுகோள்! எச்சரிக்கை!! title=

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்லும், அது பூமிக்கு நெருக்கமாக வரும் வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் (Asteroid), 2022 ஜனவரி 18 அன்று பூமியை கடக்கும் என்று நாசா ஆய்வு மையம் கூறுகிறது. 

இந்த சிறுகோளுக்கு 7482 (1994 PC1) என நாசா பெயரிட்டுள்ளதாக Earthsky.org தெரிவித்துள்ளது. 1.052 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோளின் சுழற்சி காலம் 2.6 மணி நேரம் என்றும் நாசா தகவல் (NASA ALERT) வெளியிட்டுதுள்ளது.

எர்த்ஸ்கையின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலத்தின் அளவைக் கொண்டுள்ளது. அளவு மற்றும் பூமிக்கு நெருக்கமாக பறப்பதன் அடிப்படையில் இந்த சிறுகோள் அபாயகரமானது என்று நாசா வகைப்படுத்தப்படுத்தியுள்ளது.

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு பெரியது இது என்றும், ஆனால் அது பாதுகாப்பாக பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது நாசா. இந்த சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 9, 1994 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் ராபர்ட் மெக்நாட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ | சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா?

இந்த சிறுகோள் ஜனவரி 18 அன்று, மாலை 4:51 மணிக்கு EST (ஜனவரி 19 அதிகாலை 3:21 மணிக்கு IST) பூமிக்கு மிக அருகில் நெருங்கி வர உள்ளது. அடுத்த 200 ஆண்டுகளுக்கு, பூமிக்கு இவ்வளவு நெருக்கமாக வேறு எந்த கோளும் வராது என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுகோள் பூமியை 1.2 மில்லியன் மைல்கள் அல்லது 1.93 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 5.15 மடங்கு அதிகம்.

சிறுகோள் 7482 (1994 PC1) மணிக்கு 43,754 மைல்கள் அல்லது பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 19.56 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News