பெய்ஜிங் / புதுடெல்லி: டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்திற்கு (Chinese Embassy) வெளியே ஒரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தைவான் சார்பு சுவரொட்டிகளை இட்டதைக் கண்டனம் செய்த சீனா, “தைவானின் தேசிய தினத்தைக் கொண்டாடும் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் சீனத் தூதரகத்திற்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ளன. இது ஏற்கனவே சிக்கலில் உள்ள சீனா-இந்தியா உறவுகளை இன்னும் மோசமாக்கும்.” என்று கூறியது.
"தைவான் தீவின் 'தேசிய தினத்தை' கொண்டாடும் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் புதுடில்லியில் உள்ள சீனாவின் தூதரகத்திற்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ளன. இது ஏற்கனவே சிக்கலில் உள்ள சீனா-இந்தியா உறவுகளை இன்னும் மோசமாக்கும்.” என்று சீன நிபுணர்கள் சனிக்கிழமை குளோபல் டைம்ஸின் தலையங்கம் மூலம் எச்சரித்தனர். மேலும் "இந்தியாவின் ஆளும் கட்சி அதன் பகுத்தறிவற்ற நடத்தையை விட்டுவிட்டு, நெருப்புடன் விளையாடுகிறது என்பதை உணர வேண்டும்” என்றும் சீனா (China) மேலும் மிரட்டியுள்ளது.
பாஜக டெல்லி தலைவர் தஜீந்தர் பால் சிங் பக்கா, தைவான் தேசிய தினத்தன்று தைவானை வாழ்த்தும் வகையிலான சுவரொட்டிகளின் புகைப்படங்களை ட்வீட் செய்ததை அடுத்து இந்த கடுமையான கருத்துக்கள் வந்துள்ளன.
டெல்லியில் (Delhi) உள்ள சீனத் தூதரகத்தின் ஊழியர்கள் சுவரொட்டிகளைப் பார்த்து கடுப்பாகினர். இந்த சுவரொட்டிகள் பீஜிங்கில் உள்ள தங்கள் தலைவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏற்கனவே கிழக்கு லடாக்கில் LAC பகுதியில், இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகிறது.
ALSO READ: ‘Get lost’ என்று கூறி, இந்திய ஊடகங்களுக்கு போதித்த சீனாவுக்கு பதிலளித்த Taiwan
பக்காவின் பதில்
சீன அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த பாஜக தலைவர் பக்கா, இது துவக்கம்தான் என்றும் இன்னும் பல வரவுள்ளன என்றும் கூறினார்.
"கடந்த ஆண்டு உங்கள் அதிபர் இந்தியாவுக்கு (India) வந்தபோது, ‘அதிதி தேவோ பவ’ என்ற மிக உயர்ந்த பாரம்பரியத்துடன் அவரை வரவேற்றோம். ஆனால் உங்கள் நாடு லடாக்கில் எங்களுக்கு துரோகமிழைத்தது. எங்கள் நம்பிக்கியயை நீங்கள் உடைத்தீர்கள். நீங்கள்தான் நெருப்புடன் விளையாடத் தொடங்கினீர்கள். நீங்கள்தான் உறவுகளை சீரழித்தீர்கள். நாங்கள் இப்போதுதான் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க துவங்கியுள்ளோம். இன்னும் வரும்.... காத்திருந்து பாருங்கள்” என்று அவர் தனது பதிலில் கூறினார்.
When ur President came to India last year,we greeted him with highest tradition of Atithi Devo Bhava.But ur country backstabbed us in Ladakh. U broke Trust.U started playing with fire.U worsened relation.We have just started Paying Back with Interest
MORE TO COME...WAIT & WATCH https://t.co/h9DZb6czDq— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) October 10, 2020
சீனாவின் ‘எச்சரிக்கைகள்’
‘ஒன்றுபட்ட சீனா’ கொள்கையின் கீழ், தைவானை (Taiwan) “நாடு” அல்லது “தேசம்” என்று குறிப்பிட வேண்டாம் என்றும், சாய் இங்-வென்னை (Tsai Ing-wen) தைவானின் அதிபராக அங்கீகரிக்க வேண்டாம் என்றும் டெல்லியில் உள்ள சீன பணியகம் அக்டோபர் 7 அன்று இந்திய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
"தைவானை"நாடு" அல்லது "சீனக் குடியரசு" என்றோ சீனாவின் தைவான் பிராந்தியத்தின் தலைவரை “அதிபர்” என்றோ குறிப்பிடக்கூடாது. இதனால் பொது மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பக்கூடாது" என்று சீன தூதரகம் கூறியிருந்தது.
ALSO READ: சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR