குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் ஷா!!

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!!

Last Updated : Dec 11, 2019, 12:50 PM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் ஷா!! title=

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று முன்தினம் பல மணி நேர விவாதத்துக்குப் பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் காலியிடங்கள் போக 240 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா நிறைவேற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவின் 83 உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜன்சக்தி, இந்திய குடியரசுக் கட்சி, நியமன உறுப்பினர்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 105 ஆக உள்ளது.

அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளில் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெற்றால், பெரும்பான்மைக்கு பலம் கிடைத்துவிடும் என்பதால் அக்கட்சிகளுடன் பாஜக பேச்சு நடத்தி வருகிறது. எதிரணியில், காங்கிரசின் 46 உறுப்பினர்கள், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி என 97 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த, 22 பேரின் ஆதரவு கிடைத்தால், இந்த மசோதா நிறைவேறி விடும். பார்லி கூட்டம், நாளையுடன் முடிய உள்ளது. அதனால், இந்த மசோதாவை இன்றே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதை தொடர்ந்து அவர் பேசுகையில்..... பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்கள்தொகை தலா 20 சதவீதம் சரிந்துள்ளது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு ஓடி வந்திருக்கலாம். குடியுரிமை மசோதா தொடர்பாக முஸ்லீம்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர்களிடம் கேட்கிறேன், இந்த மசோதா எந்த விதத்தில் இந்திய முஸ்லீம்களுடன் தொடர்புபடுகிறது. அவர்கள் இந்திய குடிமக்கள். எப்போதும் அப்படியே இருப்பார்கள். அவர்கள் மீது அடக்குமுறையை கொண்டு வரப்படாது. இந்த மசோதா குறித்து இஸ்லாமியர்கள் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. ஓட்டு வங்கிக்காக குடியுரிமை மசோதா கொண்டு வரவில்லை. இது மோடியின் அரசு. அரசியலமைப்பின் படி நடக்கும் இந்த அரசில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 

 

Trending News