வரலாறு காணாத பனிப்பொழிவு காணும் புது டெல்லி மக்கள்...

கடந்த வாரம் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து புதுடெல்லியில் குளிர் அலை நிலைமை தீவிரமடைந்துள்ளது. 

Last Updated : Dec 17, 2019, 10:55 AM IST
வரலாறு காணாத பனிப்பொழிவு காணும் புது டெல்லி மக்கள்... title=

கடந்த வாரம் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து புதுடெல்லியில் குளிர் அலை நிலைமை தீவிரமடைந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலவரப்படி, வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிலைமைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. டெல்லியின் நிலையினை விளக்கும் புகைப்படங்களை செய்தி நிறுவனம் ANI தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இரவு தங்குமிடம் ஒன்றில் எடுக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம், கடந்த இரண்டு மாதங்களிலிருந்து பெரும்பாலும் 'கடுமையான' அல்லது 'மிகவும் மோசமான' பிரிவின் கீழ் சென்றுள்ளது., எனினும் சற்று தலைகாட்சி சென்ற மழையில் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்த பின்னர் அதன் தரம் மிகவும் மேம்பட்டது. முக்கிய மாசுபடுத்திகள் PM 2.5 ஆனது 116-லும் ('மிதமான' வகை) மற்றும் PM 10 ஆனது 91-லும் ('திருப்திகரமான' வகை) பதிவு செய்யப்பட்டது. இவை டெல்லி லோதி சாலை பகுதியில் இருந்து பெறப்பட்ட காற்றின் தர குறியீட்டு (AQI) தரவுகள் ஆகும்.

சிஸ்டம் ஆஃப் ஏர் குவாளிட்டி மற்றும் ஆராய்ச்சி (SAFAR) படி, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் AQI ஓரளவு மோசமடைந்து 'மோசமான' பிரிவில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது, மேலும் இது மோசமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, டெல்லியில் அதிகரித்து வரும் ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறைவு ஆகியவை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிகிறது. வழக்கமாக டெல்லியில் "தொடர்ச்சியான மூடுபனி இருந்தபோதிலும், டிசம்பரில் AQI 'மிதமான' முதல் 'மோசமான' வகைக்குள் இருக்கும், ஆனால் தற்போதைய வானிலை சமீபத்திய ஆண்டுகளில் கண்ட குளிர் அளவினை விட மிக அதிகம் ஆகும்.

டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள் கடந்த வாரம் மிதமான முதல் அதிக மழை பெய்தன, இது குளிர் காலநிலைக்கு வழிவகுத்தது.

வார இறுதியில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பைகளில் குளிர் அலை நிலவும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் அடர்த்தியான முதல் குறை அடர் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இந்இதய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Trending News