“ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள “ஆபரேஷன் கை” திட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ்

Karnataka Election Result 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவிட்டால், பாஜகவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்க ஆபரேஷன் ஹஸ்தாவை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2023, 01:49 PM IST
  • வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
  • கர்நாடகாவில் ஆட்சியை அமைப்பதற்காக இரு முக்கிய கட்சிகளும் திரைமறைவு திட்டங்களை தொடங்கியுள்ளன.
  • இரு தேசிய கட்சிகளும் எங்கள் கட்சியை உடைக்க கண்டிப்பாக முயற்சி செய்யும் -ஜேடி(எஸ்) தலைவர் குமாரசாமி
“ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள “ஆபரேஷன் கை” திட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ் title=

Congress Operation Hasta: சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. நண்பகல் சுமார் 12 மணிக்குள் எந்த கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்ற விவரமும் தெரியவரும். மாலைக்குள் எந்த கட்சி அதிக பெரும்பான்மையை பெற்றுள்ளது என்ற முடிவுகள் தெரியவரும். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது. புதன்கிழமையன்று வாக்குபதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கணிப்புகளில் கூறப்பட்டது. அதேவேளையில் ஒரு சில கணிப்புகளில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களைக் கைபற்றும் என்றும் கூறப்பட்டது. ஒரு சில ஊடகங்களில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

ஒருவேளை கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல். இந்நிலையில், பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் “ஆபரேஷன் ஹஸ்தா” (Operation Hand) என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான எண்ணிக்கையை உறுதி செய்ய இரு முக்கிய கட்சிகளும் அதற்கான திரைமறைவு திட்டங்களை தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க: Karnataka Election 2023: தேர்தல் கணிதத்தை மாற்றக்கூடிய டாப் அம்சங்கள் இவைதான்!!

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் குறைந்தால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை கைப்பற்ற “ஆபரேஷன் கை” திட்டத்தை காங்கிரஸ் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறை எப்படியாகிலும் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர்கள் உறுதியாக இருப்பதால் அதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனால் “ஆபரேஷன் கை” மூலம் பாஜக மற்றும் மஜத எம்எல்ஏகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை காங்கிரஸ் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பாஜ மற்றும் மஜத கட்சிகளின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள சில எம்எல்ஏகள் வெற்றி பெறும் பட்சத்தில், அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சு வார்த்தை இப்போதே காங்கிரஸ் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

“ஆபரேஷன் தாமரை” மற்றும் “ஆபரேஷன் கை” திட்டதின் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வரும் ஜேடி(எஸ்), தனது வெற்றி பெறும் எம்எல்ஏகளை ஒன்றாக வைத்திருக்க வியூகத்தை வகுத்து வருகிறது. முன்னதாக ஜேடி(எஸ்) தலைவர் குமாரசாமி, "இரு தேசிய கட்சிகளும் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை பெறாததால் எங்கள் கட்சியை உடைக்க கண்டிப்பாக முயற்சி செய்யும். நாங்கள் எச்சரிக்கையாக இருந்து, எங்கள் எம்எல்ஏகளை ஒற்றுமையாக ஒன்றாக இருக்கும்போது, எங்கள் உதவியின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை உறுதி செய்வோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கர்நாடகா அரியணை யாருக்கு! ZEE NEWS-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

காங்கிரஸுக்கு 150 இடங்களுக்கு குறைவாக கிடைத்தால் பாஜக தனது கட்சியை உடைக்க முயற்சிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனியார் ஊடகத்திடன் கூறியுள்ளார்.

ஒருபக்கம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை தங்கள் இருவரும் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வருவதாக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். மறுபக்கம் காங்கிரசும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனால் “ஆபரேஷன் கை” மூலம் பாஜக மற்றும் மஜத எம்எல்ஏகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் பதிவான இயந்திரங் கள் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு திறக்கப்படுகின்றன. அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? வாக்காளர்கள் யார் கழுத்தில் வெற்றி மாலை சூட்டியுள்ளனர்? என்பது நாளை எண்ணப்படும் வாக்குகள் மூலம் தெரியவரும்.

மேலும் படிக்க: EC: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட EVM கர்நாடக தேர்தலில்? வதந்திக்கு நடவடிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

“ ”

Trending News