கர்நாடகா அரியணை யாருக்கு! ZEE NEWS-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ZEE NEWS மற்றும்  MATRIZE இணைந்து நடத்திய 224 இடங்களுக்கான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2023, 07:03 PM IST
  • தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான கருத்து கணிப்புகள்.
  • சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்ட சபை அமையும் எனவும் கணித்தன.
  • கர்நாடகா சட்ட பேரவை தேர்தல் வெற்றி கணிப்புகள்.
கர்நாடகா அரியணை யாருக்கு!  ZEE NEWS-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு! title=

கர்நாடகா சட்ட சபை தேர்தலில், இன்று (மே 10 புதன்கிழமை) காலை முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குபதிவு முடிந்த பிறகு கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், செய்தி சேனல்கள் தங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. CVoter, Zee News, Lokniti-CSDS, Axis My India, Today's Chanakya, Times Now, ABP-C Voter, NewsX-CNX, Republic-Jan ki Baat, regional Dighvijay-Vijayawani survey ஆகியவை தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்னும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு  சாதகமான கருத்து கணிப்புகள் வெளியானது. 2024 லோக்சபா தேர்தலில் தன்னை முக்கிய எதிர்க்கட்சியாக நிலைநிறுத்துவதற்கும் கட்சிக்கு மிகவும் தேவையான உத்வேகத்தை கொடுக்க காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கிறது. அதே சமயம் சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்ட சபை அமையும் எனவும் கணித்தன.

ZEE NEWS க்கு MATRIZE குழுவினர் இணைந்து EXIT POLL 

கர்நாடகா சட்ட பேரவை தேர்தல் வெற்றி கணிப்புகள்:

கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதம்:

பாஜக - 36 சதவீதம்

காங்கிரஸ் - 41 சதவீதம்

ஜேடிஎஸ் - 17 சதவீதம்

கட்சிகள் பெறும் தொகுதிகள்

பாஜக  - 79-94 இடங்கள்

காங்கிரஸ் -  103-118 இடங்கள்

மதசார்பற்ற ஜனதா தளம்  - 79-94 இடங்கள்

ஜன் கி பாத் கணிப்பு

மொத்த இடங்கள்: 224
பாஜக: 94-117
காங்கிரஸ்: 91-106
JD(S): 14-24
மற்றவை: 0-2

TV9 Bharatvarsh-Polstrat கணிப்புகள்
மொத்த இடங்கள்: 224

பாஜக: 88-98

காங்கிரஸ்: 99-109

JD(S): 21-26

மற்றவை: 0-4

தொங்கு சட்டசபை என்று P-Marq-Republic  கணித்துள்ளது

மொத்த இடங்கள்: 224

பாஜக: 85-100

காங்கிரஸ்: 94-108

JD(S): 24-32|

மற்றவை: 2-6

மே 13 ஆம் தேதி கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ZEE NEWS க்கு MATRIZE குழுவினர் இணைந்து EXIT POLL அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மேற்கொண்டது. ZEE NEWS மற்றும் MATRIZE குழுவினர் கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் பேசி அவர்களின் கருத்தைப் பெற்றனர். கர்நாடக வாக்காளர்களின் கருத்தின் அடிப்படையில் EXIT POLL புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் முடிவுகள் அல்ல, வெறும் EXIT POLL அதாவது கருத்து கணிப்பு மட்டுமே.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) இடையே 224 இடங்களுக்கான மும்முனைப் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இறுதியாக, மே மாதம் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெட்ட வெளிச்சமாகி விடும்.

மேலும் படிக்க | Karnataka Election 2023 Live Voting: கர்நாடகாவில் மந்தமான வாக்குப்பதிவு... கடந்த தேர்தலை விட குறைவு!

மேலும் படிக்க | Karnataka Elections 2023: தேர்தல் நிலவரம் என்ன? கருத்து கணிப்பில் இந்த கட்சி தான் முன்னிலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News