கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு அங்கு கே. ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அம்மாநில எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஜீ நியூஸ் மலையாளத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பஹுல் கிருஷ்ணா மற்றும் காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்த ஏ.எச்.ஹபீஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்த ஏ.எச்.ஹபீஸ் முதலமைச்சர் பினராயி விஜயனை கிண்டல் செய்து விமர்சிக்கும் வகையில் காயம்குளம் கொச்சுனி என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பஹுல் கிருஷ்ணா தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என கடுமையாக கூறும்போதே மீண்டும் அவர் அதே வார்த்தையை சொல்லி பஹுல் கிருஷ்ணாவை மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக பேசினார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கைலப்பில் முடிந்தது. நேரலையின்போது இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இடையே நடைபெற்ற இந்த கைகலப்பு சம்பவம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR