அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதே அடிப்படையில் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்தது. இந்நிலையில் உறுப்பு நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்து உள்ளது.
இதைக்குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா பேசுகையில்:- அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா மற்றும் பிறநாடுகளை என்.எஸ்.ஜி.யில் உறுப்பு நாடுகளாக சேர்ப்பது தொடர்பாக என்.எஸ்.ஜி. நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்று எந்தஒரு நாட்டின் மீது குறிவைக்கவில்லை. நாங்கள் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு உள்ளோம். மேலும் ஆணுஆயுத பரவல் தடை விவகாரத்தில் மாற்றம் ஏற்பட்டால், ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை நாம் எப்படி விவரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் எனக்கு தெரிந்தவரையில் புதிய நாடுகளை அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் சேர்க்கும் திட்டம் சியோல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் ஹுவா குறிப்பிட்டு உள்ளார்.