இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,67,296-லிருந்து 7,93,802 ஆக உயர்வு...!
இந்தியாவில் கொரோனா மார்ச் மாதத்தில் பரவ துவங்கியதிலிருந்து இன்று வரை மொத்தம் 7,93,802 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 26,506 பேருக்கு கொரோனா பாதிப்புகள் மற்றும் 475 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,76,685 ஆக உள்ளது. பதிவான மொத்த பாதிப்புகளில், 4,95,513 குணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நோயிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 62.4% ஆக உயர்ந்துள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, வியாழக்கிழமை நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2,83,659 ஆகும்.
மொத்தம் 2,30,599 நோயாளிகளுடன் மகாராஷ்டிராவில் கொரோனாவால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 93,673-யை எட்டியுள்ளது. மொத்த பாதிக்கபட்டவர்களின் சுமார் 1,27,259 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,667 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 1,26,581 பாதிப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை இதுவரை 1,765 ஆக உள்ளது. நோயிலிருந்து மீண்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 78,161 ஆகும். மாநிலத்தில் செயலில் உள்ளநோயாளிகளின் எண்ணிக்கை 46,655 ஆகும்.
READ | மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் 100 மின்னணு சார்ஜிங் நிலையங்கள்...
டெல்லியில் மொத்தம் 1,07,051 பாதிப்புகள் உள்ளன. தலைநகரில் இதுவரை 3,258 இறப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், நகரத்தின் மீட்பு வீதமும் அதிகரித்து வருவதாக தெரிகிறது. மொத்தத்தில், 82,226 பேர் கோவிட் -19 இலிருந்து மீண்டுள்ளனர்.
S. No. | Name of State / UT | Active Cases* | Cured/Discharged | Deaths** | Total Confirmed cases* |
---|---|---|---|---|---|
1 | Andaman and Nicobar Islands | 68 | 83 | 0 | 151 |
2 | Andhra Pradesh | 11383 | 12154 | 277 | 23814 |
3 | Arunachal Pradesh | 180 | 120 | 2 | 302 |
4 | Assam | 5284 | 8726 | 22 | 14032 |
5 | Bihar | 4013 | 9816 | 115 | 13944 |
6 | Chandigarh | 113 | 403 | 7 | 523 |
7 | Chhattisgarh | 757 | 2903 | 15 | 3675 |
8 | Dadra and Nagar Haveli and Daman and Diu | 222 | 189 | 0 | 411 |
9 | Delhi | 21567 | 82226 | 3258 | 107051 |
10 | Goa | 869 | 1273 | 9 | 2151 |
11 | Gujarat | 9468 | 27718 | 2008 | 39194 |
12 | Haryana | 4572 | 14510 | 287 | 19369 |
13 | Himachal Pradesh | 283 | 846 | 11 | 1140 |
14 | Jammu and Kashmir | 3652 | 5695 | 154 | 9501 |
15 | Jharkhand | 1015 | 2208 | 23 | 3246 |
16 | Karnataka | 17786 | 12833 | 486 | 31105 |
17 | Kerala | 2799 | 3708 | 27 | 6534 |
18 | Ladakh | 139 | 915 | 1 | 1055 |
19 | Madhya Pradesh | 3475 | 12232 | 634 | 16341 |
20 | Maharashtra | 93673 | 127259 | 9667 | 230599 |
21 | Manipur | 651 | 799 | 0 | 1450 |
22 | Meghalaya | 45 | 66 | 2 | 113 |
23 | Mizoram | 64 | 133 | 0 | 197 |
24 | Nagaland | 369 | 304 | 0 | 673 |
25 | Odisha | 3742 | 7407 | 52 | 11201 |
26 | Puducherry | 553 | 584 | 14 | 1151 |
27 | Punjab | 2012 | 4945 | 183 | 7140 |
28 | Rajasthan | 5002 | 17070 | 491 | 22563 |
29 | Sikkim | 62 | 72 | 0 | 134 |
30 | Tamil Nadu | 46655 | 78161 | 1765 | 126581 |
31 | Telangana | 12423 | 18192 | 331 | 30946 |
32 | Tripura | 437 | 1338 | 1 | 1776 |
33 | Uttarakhand | 587 | 2672 | 46 | 3305 |
34 | Uttar Pradesh | 10373 | 21127 | 862 | 32362 |
35 | West Bengal | 8231 | 16826 | 854 | 25911 |
Cases being reassigned to states | 4161 | 4161 | |||
Total# | 276685 | 495513 | 21604 | 793802 |
உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1.18 கோடியைத் தாண்டியுள்ளன, மேலும் மொத்த இறப்புகள் 5,45,000-யை தாண்டிவிட்டன. வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடான பிரேசில் இதுவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து 2.93 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் மற்றும் 1,30,000 க்கும் அதிகமான இறப்புக்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.