Covid-19: திட்டமிடல் இல்லாமல் விதிக்கப்பட்ட Lockdown.. உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சாலைகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உடனடியாக இலவச உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்று கையொப்பமிட்டவர்கள் தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2020, 08:42 PM IST
Covid-19: திட்டமிடல் இல்லாமல் விதிக்கப்பட்ட Lockdown.. உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை title=

புது டெல்லி: நாட்டில் பரவுகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இந்தியாவின் பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு 200 க்கும் மேற்பட்ட குடிமக்கள் சனிக்கிழமை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். 

ஒரு அறிக்கையில், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற அமைப்பை சேர்ந்த குடிமக்கள் தங்கள் வீடுகளை அடைய முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் இலவச உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் 

கையொப்பமிட்டவர்களில் பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ், ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் அடங்குவர்.

"மார்ச் 24, 2020 அன்று திடீரென 21 நாள் அகில இந்திய முழுவதும் லாக்-டவுன் உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மூலம் பலருக்கு பயங்கரமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "சரியான திட்டமிடல் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நமது தொழிலாளர்களில் 90% பேர் மீது அது ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தை முற்றிலும் கவனிக்கவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து மிகுந்த குழப்பமான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் பலர் வீதிகளிலும், அவர்கள் பணிபுரியும் பகுதிகளிலும் சிக்கி தவிக்கின்றனர். எனவே உடனடியாக குடிமக்களின் நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

அவர்களுக்கு இலவசமாக சமைத்த உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தை ஏற்பாடு செய்ய உணவு மையங்களை அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் மற்றும் மத்திய கிடங்குக் கழகம் கோடவுன்களில் கிடைக்கின்றன. அவற்றில் சில சதவீதத்தை சமைத்த உணவு மற்றும் சாப்பிட தேவையனவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படலாம்.

கோவிட் -19 காரணமாக மக்களின் நீதிபற்றாக்குறையை சமாளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை ரூ .1.70 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். இது நேரடி பணப் பரிமாற்றங்களை வழங்கும் மற்றும் சமூகத்தின் சில பிரிவுகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும்.

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிசெய்ய சுத்தம் செய்யப்பட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஏற்பாடு செய்யுமாறு கையொப்பமிட்டவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர். தங்கள் தொலைதூர பணியிடங்களில் சிக்கியுள்ள மற்றவர்களுக்கு போதுமான உணவு, சோப்பு, சானிட்டரி பேட்கள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடம் உறுதி செய்யப்பட வேண்டும்" என்று அவர்கள் கூறினர். 

"இது ஒரு தேசிய அவசரநிலை மற்றும் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் பட்டினி காரணமாக அவர்கள் மரணம் அடையும் அபாயத்தில் உள்ளனர். எனவே, இந்த நெருக்கடிக்கு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Trending News