COVID-19 Update: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 44,658

மொத்த தொற்று பாதிப்பில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2021, 10:12 AM IST
  • ஆகஸ்ட் 26 வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 51,49,54,309.
  • கேரளாவில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் TPR செவ்வாய்க்கிழமை 18.04% லிருந்து 19.03% ஆக உயர்ந்தது.
  • கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள்
COVID-19 Update: கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியாவில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 44,658   title=

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில்  44,658 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 32,988 பேர் குணமடைந்துள்ளனர்;  496 பெர் இறந்துள்ளனர் என  சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த தொற்று பாதிப்பில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. 

கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 30,007 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 18,997 பேர் குணமடைந்துள்ளனர். 162 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,81,209 ஆக உயர்ந்துள்ளது., அதே நேரத்தில் பரிசோதனை செய்தவர்களில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் (TPR) 18.03% ஆக உள்ளது. இதற்கு முன், மே 30 ஆம் தேதி 30,491 கோவிட் வழக்குகளைப் பதிவுசெய்தபோது மாநிலம் 30,000  என்ற அளவை தாண்டியது. 

Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…

கடந்த வாரத்தில் கேரளாவில் இருந்து பதிவான புதிய தொற்று எண்ணிக்கை, மொத்த கோவிட் -19 பாதிப்புகளில்  58.4%, என்ற அளவில் இருந்தது. புதன்கிழமை, கேரளாவில் 31,445 பேருக்கு புதிய தொற்று  மற்றும் 215 இறப்புகளுடன் புதிய தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்தன. நேரத்தில் பரிசோதனை செய்தவர்களில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் TPR செவ்வாய்க்கிழமை 18.04% லிருந்து 19.03% ஆக உயர்ந்தது.

இந்தியாவில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 18,24,931 மாதிரிகள் உட்பட ஆகஸ்ட் 26 வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 51,49,54,309 என்று ANI தெரிவித்துள்ளது

இதற்கிடையில், உள்நாட்டுப் பயணம் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டது,  RT-PCR பரிசோதனை அல்லது நுழைவுக்கான RAT அறிக்கையை வழங்குவது கட்டாயம் என்ற உள்ள நிலையில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இந்த விதியிலிருந்து  விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ALSO READ Covid Vaccine Update: அமெரிக்காவில் Pfizer தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News