அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் ஊரடங்கு? என்ன சொல்கிறது கெஜ்ரிவால் அரசு

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு? என்ன சொல்கிறது கெஜ்ரிவால் அரசு. வாருங்கள் பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 01:49 PM IST
  • டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று.
  • மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம். மீண்டும் ஊரடங்கு இல்லை.
  • டெல்லியில் தொற்றுநோயால் இதுவரை 4618 நோயாளிகள் இறந்துள்ளனர்.
  • கோவிட் -19 உடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: சத்யேந்தர் ஜெயின்.
அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் ஊரடங்கு? என்ன சொல்கிறது கெஜ்ரிவால் அரசு title=

புது டெல்லி: கடந்த சில நாட்களாக தேசிய தலைநகரில் கோவிட் -19 (COVID-19 in Delhi) பாதிப்பு கடுமையாக அதிகரித்த வரும் நிலையில், டெல்லி அரசு மீண்டும் முழு ஊரடங்கை செயல்படுத்துமா என்ற கேள்வி டெல்லிவாசிகளின் மனதில் தோன்றியுள்ளது. அதுக்குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (Satyendra Jain) கூறுகையில், மீண்டும் ஊரடங்கு வாய்ப்பை நிராகரித்துள்ளது. பொருளாதாரத்தை முற்றிலுமாக மூட முடியாது. ஏனெனில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அதைப் பொறுத்தது என்றார். 

டெல்லி மக்கள் இதனால் கவலைப்படக்கூடாது. ஆனால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்யேந்திர ஜெயின் கூறினார். இந்த சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க பொது இடங்களில் அதிக விழிப்புணர்வும் பொறுப்பும் காட்டப்பட வேண்டும். 

இரண்டு லட்சம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எட்டிய டெல்லியில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 22,378 ஒஎருக்கு தொற்று பதிவாகியுள்ளன, அவற்றில் 3609 பேருக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் பதிவாகியுள்ளன. இது 76 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்பு பதிவாகியுள்ளன.

ALSO READ |  டெல்லி மெட்ரோ பயணத்தின் போது இந்த விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள், இல்லையெனில்..!!

டெல்லியில் இந்த தொற்றுநோயால் இதுவரை 4618 நோயாளிகள் இறந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிட்ட பின்னர் டெல்லியில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்களிடம் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. தேவையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிட் -19 உடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் இது அவ்வளவு சீக்கிரத்தில் ஒழிக்க முடியாது என்றார். 

டெல்லியின் சுகாதார அமைச்சர் (Delhi Health Minister) மேலும் கூறுகையில், எல்லாவற்றையும் (பொருளாதாரம் - Economy) முற்றிலுமாக நிறுத்த முடியாது, ஏனெனில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அதைச் சார்ந்தது. டெல்லி மெட்ரோவும் திங்கள்கிழமை முதல் ஒரு கட்டமாக தனது சேவைகளைத் தொடங்கியுள்ள நேரத்தில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. 

மெட்ரோ சேவைகளின் (Delhi Metro) செயல்பாட்டின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான கேள்விக்கு, மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் பொது இடங்களில் அதிக பொறுப்பைக் காட்ட வேண்டும் என்று ஜெயின் கூறினார். நீங்கள் முகமூடி அணிய மாட்டீர்கள் என்றால், அது மெட்ரோ மட்டுமல்ல, நீங்கள் எங்கிருந்தாலும் தொற்றுநோயைப் பெற்றுக்கொள்வீர்கள். 

ALSO READ |  டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச வருகையாளர்களுக்கு COVID-19 சோதனை வசதி

'பீதி அடையத் தேவையில்லை' என்று வலியுறுத்திய ஜெயின், நான் சொன்னது போல், நாம் அனைவரும் கோவிட் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மார்ச் 22 முதல் டெல்லி மெட்ரோ மூடப்பட்ட நிலையில், மார்ச் 25 முதல் நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டது, இதில் மக்கள் வீட்டுக்குள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் வணிக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் கட்டங்களாகத் தொடங்கின.

Trending News