HAL நிறுவனத்திடமிருந்து 12 Su-30 MKI விமானங்கள் வாங்க அமைச்சரவை ஒப்புதல்!

இந்திய விமானப்படையின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்த்திட பெரிய அளவில் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2023, 06:36 PM IST
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம்.
  • கடந்த பல ஆண்டுகளில் விபத்துக்களால் அழிக்கப்பட்ட 12 விமானங்கள்.
  • சுகோய்-30 MKI விமானத்தின் அம்சங்கள்.
HAL நிறுவனத்திடமிருந்து 12 Su-30 MKI விமானங்கள் வாங்க அமைச்சரவை ஒப்புதல்! title=

இந்திய விமானப்படையின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்த்திட பெரிய அளவில் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 12 சுகோய் 30 எம்கேஐ போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த விமானங்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) லிமிடெட் நிறுவனத்தால் (Hindustan Aeronautics Ltd - HAL) தயாரிக்கப்படுவது சிறப்பு. அதாவது அவை இந்தியாவில்  தயாரிக்கப்படும் விமானங்கள்.

HAL நிறுவனத்திடமிருந்து  கொள்முதல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவதிற்கான ஆயுதங்கள் கருவிகளை  கொள்முதல் செய்யும் கவுன்சில் (DAC) வெள்ளிக்கிழமை ஏறக்குறைய 45,000 கோடி ரூபாய்க்கான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து 12 Su-30 MKI விமானங்களை வாங்குவதற்கான AoN உடன் தொடர்புடைய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கம்

உண்மையில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் விமானம் மற்றும் கிரவுண்ட் சிஸ்டமும் அடங்கும். விமானத்தில் தேவைக்கேற்ப 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பொருட்களும் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார். இவை இந்திய விமானப்படையின் அதி நவீன Su-30 MKI விமானமாக இருக்கும். இதில் பல இந்திய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விமானங்கள் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த விமானங்கள் முற்றிலும் நவீனமாகவும், புதிய சகாப்தத்தின் தேவைக்கேற்பவும் இருக்கும்.

ரூ.11,000 கோடி திட்டம்

ரூ.11,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் விமானம் மற்றும் அது தொடர்பானகிரவுண்ட் அமைப்புகளும் அடங்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் விபத்துக்களால் அழிக்கப்பட்ட அந்த 12 விமானங்களுக்கு பதிலாக இவை இருக்கும். இது ஒரு பன்முக போர் விமானம். இது வான் வழிப் போரையும்,  நில வழிப் போரையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள்

சுகோய்-30 MKI விமானத்தின் அம்சங்கள்

இந்திய விமானப்படையில் மிகவும் சக்தி வாய்ந்த விமானமாக இது கருதப்படுகிறது. அதிவேகமாகவும், குறைந்த வேகத்திலும் காற்றில் அக்ரோபாட்டிக்ஸ் செய்து எதிரிகளை ஏமாற்றி தாக்குவது இதன் சிறப்பு. இந்த விமானத்தில் இரண்டு இன்ஜின்கள் மற்றும் இரண்டு விமானிகள் அமரும் வசதியும் உள்ளது. இந்த விமானங்களில் சில சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சுகோய் விமானம் 3,000 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டது. இருப்பினும், அதன் பயண வரம்பு 3,200 கிலோமீட்டர்கள் மற்றும் போர் புரிவதற்கான ஆரம் வரம்பு 1,500 கிலோமீட்டர்கள். எடை அதிகமாக இருந்தாலும், இந்த போர் விமானம் அதிவேகத்திற்கு பெயர் பெற்றது. இது மணிக்கு 2,100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது.

இந்திய கடற்படைக்கான கொள்முதல்

இந்திய கடற்படைக்கான அடுத்த தலைமுறை ஆய்வுக் கப்பல்களை வாங்குவதற்கும் DAC ஒப்புதல் அளித்துள்ளது. ஹைட்ரோகிராஃபிக் செயல்பாடுகளைச் செய்வதில் கப்பல் படையின் திறன்களை பெரிதும் மேம்படுத்தும் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் மேலும் கூறினார். இந்த கொள்முதல்கள் அனைத்தும் இந்திய விற்பனையாளர்களிடமிருந்து வாங்குதல் (இந்திய-சுதேசி வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட (IDMM)/Buy (Indian) பிரிவின் கீழ், கொள்முதல் செய்யப்படும். இந்திய பாதுகாப்புத் துறைக்கு 'ஆத்மநிர்பர் பாரத்' என்ற இலக்கை அடைய கணிசமான ஊக்கத்தை அளிக்கும். 

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை

பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் பேசிய, ராஜ்நாத் சிங், சுதேசிமயமாக்கல் நோக்கத்தை மேம்படுத்துவதற்கான நேரம் இது என்று கூறினார். "IDDM திட்டங்களுக்கு 50 சதவீத உள்நாட்டு பொருட்களை விட, குறைந்தபட்சம் 60-65 சதவீத உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். இந்தியத் தொழில்துறையுடன் கலந்தாலோசித்து குறைந்தபட்ச உள்நாட்டு பொருட்களுக்கான வரம்பை அதிகரிப்பதில் பணியாற்றுமாறு  முப்படைகளின் தலைவர், ராணுவ தலைவர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News