நேரடி வரி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியயும் மற்றும் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்து உள்ளது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் நேரடி வரி-ஜிடிபி விகிதத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலவுகிறது. 2017-18 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.98% ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நேரடி வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமாகும்.
The key highlights of these statistics include:
There is a constant growth in direct tax-GDP ratio over last three years and the ratio of 5.98% in FY 2017-18 is the best DT-GDP ratio in last 10 years.— Ministry of Finance (@FinMinIndia) October 22, 2018
கடந்த நான்கு நிதியாண்டில், அதாவது கடந்த 2013-14 நிதியாண்டில் 3.79 கோடியிலிருந்து 2017-18 நிதியாண்டில் 6.85 கோடி ரூபாயாக வரி தாக்கல் அதிகரித்துள்ளது.
வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடந்த 2013-14 நிதியாண்டில் 3.31 கோடியில் இருந்து 2017-18 நிதியாண்டில் 5.44 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Other highlights include : There is a growth of more than 80% in the number of returns filed in the last four financial years from 3.79 crore in FY 2013-14 (base year) to 6.85 crore in FY 2017-18.
— Ministry of Finance (@FinMinIndia) October 22, 2018
இந்த மூன்று ஆண்டு காலத்தில் வரி செலுத்துவோரில் தங்கள் வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த 2014-15 நிதியாண்டில் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் எனக் காட்டினர். தற்போது 2017-18 நிதியாண்டில் 1,40,139 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் என தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% ஆக அதிகரித்துள்ளது.
Total number of taxpayers (including corporates, firms, HUFs, etc.) showing income of above Rs. 1 crore has also registered sharp increase over the three-year horizon.
— Ministry of Finance (@FinMinIndia) October 22, 2018
நிறுவன வரி செலுத்துவோரின் சராசரி கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.32.28 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.49.95 ஆகா 55% அதிகரித்துள்ளது. தனிநபர் வரி செலுத்துவோர் சராசரி வருமானம் 2014-15 நிதியாண்டில் ரூ.46,377 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.5,8,576 ஆகா அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.