மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!
மேற்குவங்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். இதற்கு மருத்துவர் சரியாக கண்காணிக்காதது தான் காரணம் என நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மருத்துவர்கள் நிபந்தனைகள் விடுத்தள்ளனர். இந்நிலையில் இன்று காலைமுதல் 24 மணி நேரம் நாடுதழுவிய போராட்டத்துக்கு அனைத்திந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
Delhi: Resident Doctors' Association of All India Institute of Medical Sciences (#AIIMS) holds protest march against violence against doctors in West Bengal. pic.twitter.com/A2TyjiM8PO
— ANI (@ANI) June 17, 2019
எனினும் நேற்று மீண்டும் தங்கள் ஆட்சிமன்ற குழுவை கூட்டி ஆலோசனை நடத்திய அவர்கள், பேச்சுவார்த்தைக்கான இடத்தை முதல்-மந்திரியே தேர்வு செய்யலாம் எனவும், ஆனால் அது திறந்த அரங்கமாகவே இருக்க வேண்டும் எனவும் கூறினர். குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய இடமாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்து உள்ளனர். டாக்டர்கள் சங்கம் அறிவித்தபடி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
Gujarat: Indian Medical Association today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal; Doctors at Sir Sayajirao General Hospital in Vadodara hold protest outside Out Patient Department pic.twitter.com/Ya6NS3CE3x
— ANI (@ANI) June 17, 2019
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் போராட்டத்தில் மட்டும் ஈடுபடுவார்கள் என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.