இரு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் : கருத்துக் கணிப்பு வெளியீடு

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்றுடன் முடிந்துள்ள நிலையில் ஊடங்களில் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்

Last Updated : Dec 14, 2017, 08:27 PM IST
இரு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் : கருத்துக் கணிப்பு வெளியீடு title=

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்றுடன் முடிந்துள்ளது. இந்நிலையில் ஊடங்களில் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த முடிவுகளில் இரண்டு மாநிலங்களில் பா.ஜ. கட்சிக்கு சாதகமாகவே உள்ளன. 

68 தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், 182 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஆட்சியமைக் 92 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதிவான வாக்குகளை வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் குறித்து தொலைகாட்சிகள் தங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளன. 

 

Trending News