கொரோனா பீதிக்கு மத்தியில் முக கவசம் அணிய மறுத்த தனது மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், முக கவசம் அணிய மறுத்த தனது மகனை, தந்தையே கொலை செய்துள்ளார். தகவல்கள் படி இந்த சம்பவம் ஷோவபஜார் லேனில் நிகழ்ந்துள்ளது, இங்கு வசிக்கும் 78 வயதான பன்சிதர் மல்லிக் என அடையாளம் காணப்பட்ட நபர், ஷிர்செண்டு மல்லிக் என அடையாளம் காணப்பட்ட தனது 45 வயது மகனை, ஒரு துணி பட்டையின் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
READ | ஏப்ரல் 20 வரை மின்னலுடன் கூடிய இடி-மழைக்கு வாய்ப்பு; IMD தகவல்...
இந்த சம்பவத்தில் பலியான உடல் ஊனமுற்ற மகன், வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கையில், அவரது தந்தை முக கவசம் அணியுமாறு கேட்டுள்ளார். எனினும் மகன் முக கவசம் அணிய முடியாது என மறுத்துள்ளார். தனது மகனின் பதிலால் ஆத்திரமடைந்த தந்தை தனது சொந்த மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், ஷியாம்புகூர் காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறை முன் தந்தை தானே சரணடைந்தார். அவர் முழு கதையையும் அதிகாரிகளின் முன்னால் தெரிவித்து தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ | Lockdown-ல் கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்க DGP திரிபாதி உத்தரவு...
அந்த நபர் காவல்துறை முன் சரணடைந்த உடனேயே, மற்ற அதிகாரிகளுடன் ஷியம்புகூர் காவல் நிலைய பொறுப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகன் இறந்து கிடப்பதைக் கண்டார். உடல் அகற்றப்பட்டு மேலதிக முறைப்படி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கொல்கத்தா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், பன்சிதர் மல்லிக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.