இருசக்கர வாகனங்கள் மீதான வரியைக் குறைக்கும் திட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முன்வைக்கலாம்

செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎச்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும், 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 06:40 PM IST
இருசக்கர வாகனங்கள் மீதான வரியைக் குறைக்கும் திட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முன்வைக்கலாம் title=

புது டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியைக் குறைக்கும் தொழில்துறையின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இரு சக்கர வாகனங்கள் தற்போது 28% ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றன.

செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும், மேலும் கொரோனா வைரஸ் (COVID-19) மற்றும் அதன் பரவலை கட்டுப்படுத்தப் போடப்பட்ட ஊரடங்கு (Lockdown) காரணமாகவும் தனியார் நுகர்வு மந்தமாக உள்ளது. எவ்வாறாயினும், கவுன்சில் கூட்டத்தின் போது வட்டி விகிதக் குறைப்புக்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்டால், அரசாங்கம் எஸ்டி வரியை குறைக்க வேண்டியிருக்கும்.

ALSO READ |  ஆல்கஹால் கலந்த சானிடைசர், சோப்பு, டெட்டோல்களுக்கு 18% GST வரி: நிதி அமைச்சகம்

தொழில்துறையில் இந்த வட்டி விகித திருத்தத்திற்கு தகுதியானது என்பதால் இது உண்மையில் ஒரு நல்ல ஆலோசனையாகும் என்று அவர் (நிதி மந்திரி) உறுதியளித்தார். இதன் மூலம், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், எங்கள் கோரிகக்கி எடுத்துக் கொள்ளப்படும் "என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ - CII) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவுத்துறையை சார்ந்த ஹோட்டல்கள், பார் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளையும் அரசாங்கம் ஆராயும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

ALSO READ |  ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்

"சுற்றுலா, ஹோட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற பல துறைகள் தொற்றுநோயால் விகிதாசார அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்ட நிதி அமைச்சர், இவை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பெருக்க தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான துறைகள் என்று அமைச்சர் கூறினார். 

Trending News