வெளிநாட்டினர் குட்டை பாவாடை அணியகூடாது -மகேஷ் சர்மா

Updated: Aug 29, 2016, 12:09 PM IST
வெளிநாட்டினர் குட்டை பாவாடை அணியகூடாது -மகேஷ் சர்மா
Zee Media Bureau

இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணியக் கூடாது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்தார். 

அப்போது மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசியது:- வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு வந்ததும், அவர்களுக்கு ”வெல்கமிங் கிட்” ஒன்று வழங்கப்படும் அதில், இந்தியாவில் இருக்கும் போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவை  பட்டியலிட்டு அதன் விபரங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்றி திரியக் கூடாது, ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது. தாங்கள் பயணிக்கும் கார்களின் எண்களை புகைப்படம் எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.