இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி (Florence Parly) ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தது தொடர்பாக, இந்திய ஆயுதப்படைகளுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்தார்.
ALSO READ | விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!
கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) அருகே கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கிற்கு (Rajnath Singh) பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி கடிதம் எழுதியுள்ளதாக பிரெஞ்சு தூதரக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளன.
புளோரன்ஸ் பார்லி தனது கடிதத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் தேசத்திற்கு இது மிக பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும், இந்த கடினமான சூழ்நிலைகளில், பிரெஞ்சு ஆயுதப்படைகளுடன் தனது உறுதியான மற்றும் நட்பு ரீதியான ஆதரவையும் தெரிவிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஆயுதப்படைகளுக்கும், வீரர்களின் மரணத்தால் வாடியுள்ள குடும்பங்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | டிக் டாக் மற்றும் பிற சீன செயலிகள் மீது அரசு தடை விதித்துள்ளதன் தாக்கம் என்ன..!!!
இந்தியாவிற்கும் (India) சீனாவிற்கும் (China) இடையே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக லடாக் துறையில், இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரின் இந்த கடிதம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் வலுவடைந்து வருகின்றன. பிரான்சிலிருந்து ஆறு ரஃபேல் போர் விமானங்கள், ஜூலை 27 அன்று இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்திய விமானப்படையின் போர் திறன் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.