மீண்டும் முழு ஊரடங்கு: உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு SC அறிவுறுத்தல்

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 3.92 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.95 கோடிக்கு மேல் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 10:21 AM IST
  • கொரோனாவின் இரண்டாவது அலையில், தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.
  • ஞாயிற்றுக்கிழமை 3.92 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கோவிட் -19 லாக்டவுன் விதிப்பது குறித்து ஆலோசிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
மீண்டும் முழு ஊரடங்கு: உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு SC அறிவுறுத்தல்   title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முழுமையான கோவிட் -19 லாக்டவுன் விதிப்பது குறித்து ஆலோசிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 2, 2021) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

COVID-19 தொற்று நிலைமை குறித்த பல்வேறு அமர்வுகளை உச்சநீதிமன்றம் நடத்தியது. இவற்றுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் (Supremem Court) இந்த உத்தரவு வந்துள்ளது. 

"கொரோனாவின் இரண்டாவது அலையில், தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்து பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்" என உச்ச நீதிமன்றம் கூறியது.

உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறுகையில், "அதே நேரத்தில், மக்கள் கூட்டங்கள் மற்றும் சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க பரிசீலிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை நாங்கள் தீவிரமாகக் கேட்டுக்கொள்கிறோம். இரண்டாவது அலைகளில் வைரஸைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை விதிப்பது பற்றியும் அவர்கள் யோசிக்கலாம்" என்றது. 

ALSO READ: இந்தியாவில் லாக்டவுன் ஒன்று தான் தீர்வா; AIIMS இயக்குநர் கூறுவது என்ன

"முழு ஊரடங்கால் (Lockdown) ஏற்படக்கூடும் சமூக-பொருளாதார தாக்கத்தை, குறிப்பாக, நலிந்த சமூகத்தினரின் மீது இது ஏற்படுத்தும் பாதிப்பை நாங்கள்  அறிந்திருக்கிறோம். ஆகவே, லாக்டவுன் விதிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு முன்னர் இந்த சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் " என்றும் உச்ச நீதிமன்றம் தன் அறிவுறுத்தலில் கூறியுள்ளது. 

இதற்கிடையில், இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 3.92 லட்சம் பேர் புதிதாக தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.95 கோடிக்கு மேல் உள்ளது (1,95,57,457). இதில் 33,49,644 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி 2.15 லட்சத்துக்கும் மேற்பட்ட (2,15,542) நோயாளிகள் இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரையிலான தரவுகளின் படி 1,59,92,271 ஆக உள்ளது.

ALSO READ: கோவிஷீல்டு தடுப்பூசியை வெளிநாடுகளில் தயாரிக்க திட்டம்: SII தலைவர் ஆதர் பூனவல்லா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News