படுகுழியில் பொருளாதாரம்: பாஜக அரசு எப்போ கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி

மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதாரம் குறித்து எப்பொழுது கண்ணை திறக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 10, 2019, 01:54 PM IST
படுகுழியில் பொருளாதாரம்: பாஜக அரசு எப்போ கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி
File photo

புதுடெல்லி: பொருளாதாரம் மந்தநிலை காரணமாக வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்தியர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு எப்பொழுது கண்ணை திறக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தநிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதமாக இருந்தது. அதாவது கடந்த வருட காலாண்டுடன் இதே ஒப்பிடும்போது 0.8 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. மத்திய அரசை தொடர்ந்து எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்கள் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. 

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பக்கத்தில் பொருளாதாரம் மந்தநிலை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, 

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையின் ஆழமான படுகுழியை நோக்கி செல்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தின் மேல் கூர்மையான கத்தி தொங்குகிறது. மேலும் வாகனத்துறை மற்றும் டிரக் துறையின் சரிவு என்பது உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையில் எதிர்மறையான வளர்ச்சியையும், சந்தையின் நம்பிக்கையும் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும். 

மத்திய அரசு எப்போது தங்கள் கண்களைத் திறக்கும்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.