காதலன் கண் முன்னே காதலியை... கர்நாடகாவில் நடந்த கொடூரம்!

காதலன் கண் முன்னே காதலியை ஆறு பேர் கொண்ட கும்பள் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : May 9, 2019, 07:26 PM IST
காதலன் கண் முன்னே காதலியை... கர்நாடகாவில் நடந்த கொடூரம்! title=

காதலன் கண் முன்னே காதலியை ஆறு பேர் கொண்ட கும்பள் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை அவரது காதலர் கண் முன்னே ஆறு பேர் கொண்ட கும்பள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 

மைசூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லிங்கராஜ் பூர் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் அமித் குமார் சிங் தெரிவிக்கையில்., பாதிக்கப்பட்ட பெண் தனது காதலர் உதவியுடன் முன்வாங்கிய கடன் தொகையை செலுத்த சென்றதாகவும், கடன் தொகையை செலுத்தி வீடு திரும்புகையில் இருவரையும் ஆறு பேர் கொண்டு கும்பள் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும் தெரிகிறது.

முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனை கற்களாலும், இரும்பு கம்பியாலும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர், பின்னர் ஆதரவற்று கிடந்த பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து இளம்பெண் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது தனி படை அமைத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News