கொடிய கொரோனா வைரஸ் தொற்றை விரட்ட, குஜராத்தில் ஒரு 20 வயது இளைஞன் தனது நாக்கை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர் சர்மா கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சுகாம் (குஜராத்) பவானி மாதா கோவிலில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தனது கிராமத்திலிருந்து கொரோனா வைரஸை விரட்ட, தனது நாக்கை வெட்டிக்கொள்ளுமாறு அவரது கனவில் தேவி சொன்னதாகவும், அதன் காரணமாக நாராபெட்டில் (குஜராத்) நதேஸ்வரி மாதா கோவிலுக்குச் சென்று தனது நாக்கை பிளேடால் வெட்டிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் மயக்கமடைந்த அவரை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டு சுகாமில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனையில் அனுமதித்ததாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதே, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்று எல்லை பாதுகாப்பு படை ஒரு செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டது. மற்றும் சமூக தூரத்தை பின்பற்றவும், முகமூடி அணியவும், கைகளை கழுவவும் வேண்டும் என்றும் அவர்கள் மக்களை வலியுறுத்தினர்.
ரவீந்தர் சர்மாவின் சொந்த மாநிலத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 69 இறப்புகளுடன் 1,355-ஆக உயர்ந்துள்ளது, இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 14,792-ஆக உயர்ந்ததோடு 488 பேர் வைரஸால் பலியாகியுள்ளனர் எனவும் அரசாங்க பகுப்பாய்வு தெரிவிக்கின்றது.