6 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறைவாசத்திற்கு பிறகு இந்திய திரும்பிய ஹமீத் அன்சாரி

பாக்கிஸ்தானிய சிறையில் இருந்து இந்திய குடிமகன் ஹமீத் நிஹால் அன்சாரி விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2018, 07:42 PM IST
6 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறைவாசத்திற்கு பிறகு இந்திய திரும்பிய ஹமீத் அன்சாரி title=

தான் காதலித்த ஒரு பெண்ணை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக பாகிஸ்தானில் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ஹமீத் நிஹால் அன்சாரியை பாகிஸ்தான் உளவுத்துறை கைது செய்தது. 

ஹமீத் நிஹால் அன்சாரி போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த கூறி பெஷாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

 

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியுடன் ஹமீத் நிஹால் அன்சாரியின் தண்டனை காலம் முடிந்தது. ஆனால் அவரை சிறை நிர்வாகம் விடுவிக்கவில்லை. இதனால் ஹமீத் நிஹால் அன்சாரி தரப்பில், பெஷாவர் ராணுவ நீதிமன்றத்தில் டிசம்பர் 15 ஆம் தேதியுடன் எனது தண்டனை காலம் முடிந்துள்ளது. ஆனால் என்னை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை எனக் கூறி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கூடிய விரைவில் அன்சாரியை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

 

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று ஹமீத் நிஹால் அன்சாரி விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தார்.

 

 

Trending News