குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை!

பாலியல் வன்கொடுமைக்கு தூக்குத்தண்டனை என ஹரியானாவில் மசோதா நிறைவேற்றம்!

Updated: Mar 16, 2018, 07:53 AM IST
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை!
ZeeNewsTamil

ஹரியானாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கக்கூடிய சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியுள்ளது.

ஹரியானாவில் தற்போது குழந்தைகள் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என ஒரு சட்டம் இயற்ற முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து ஹரியானா மாநில சட்டப்பேரவையில் இதற்கான மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.