Smuggling: இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கேன்களில் மறைத்து வைக்கப்பட்ட ஹெராயின்

நவி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் ஒரு கொள்கலனில் இருந்து 25.45 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2021, 12:10 AM IST
Smuggling: இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கேன்களில் மறைத்து வைக்கப்பட்ட ஹெராயின் title=

மும்பை: ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலனில் கடத்தப்பட்ட ஹெராயின் மீட்கப்பட்டு 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (Directorate of Revenue Intelligence) மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த கடத்தல் சரக்கு பிடிபட்டது.

கடந்த மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3,000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதைப் போலவே, இந்த சரக்குகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்ததாக டிஆர்ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயில் கேன்களில் எள்ளெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கடத்தப்படுவதாக டிஆர்ஐ மும்பை மண்டல பிரிவுக்கு துப்பு கிடைத்தது. பரிசோதனை செய்யப்பட்டபோது, எண்ணெய் கேன்களில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

Also Read | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்

வழக்கமான பரிசோதனையின் போது மருந்தைக் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, துப்பு கிடைத்ததால் தான் தீவிரமான சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தல் கண்டறியப்பட்டது.

டிஆர்ஐ அதிகாரிகள் நவா ஷேவா துறைமுகத்தில் உள்ள கொள்கலனை பரிசோதித்ததில், கடுகு எண்ணெயின் ஐந்து கேன்களின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பரிசோதித்ததில், 25.45 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது என்று டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த கொள்கலன் ஈரானில் உள்ள சபாஹார் துறைமுகம் வழியாக வந்தது, இது கந்தஹாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது, தெற்கு மும்பையில் இருந்த முகவரிக்கு இறக்குமதியாளர் நிறுவனத்தின் பெயரில் வந்தது.

ALSO READ | குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்!

விசாரணையின் போது, இறக்குமதியாளர் - ஈரானில் நீண்ட காலம் வாழ்ந்தவர், அவரது ஆப்கானிஸ்தான் தொடர்புகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தினார்,

டிஆர்ஐ. போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டார். சரக்கு சுமூகமாக இறக்குமதி செய்வதற்காக 'ஹவாலா' பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, டிஆர்ஐ 294 கிலோ ஹெராயினை ஜூலை மாதம் நவா ஷேவா துறைமுகத்தில் கைப்பற்றியது. சரக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானிய துறைமுகம் வழியாக அனுப்பப்பட்டது.

Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News