திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய 29வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று (நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபார் தீவுகள் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பங்கேற்றன.
தமிழகம் மற்றும் கேரள மாநில முதலமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு தொடர்பான பணிகளில் மும்முரமாக இருப்பதால் அவர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதை குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரளாவில் நடைபெறும்போது, அனைத்து தென்னக மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தலைமை செயலாளர்கள், மத்திய, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துணைத் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், வனம், சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து என பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
40 out 51 pending issues were resolved in the context of today's meeting of the Southern Zonal Council in Tirupati chaired by Home Minister Amit Shah, he tweets pic.twitter.com/5hRTMk1tjg
— ANI (@ANI) November 14, 2021
மாநில அரசுகள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர். இந்தக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, அனைத்து பிராந்திய மொழிகளிலும் பேசுவதற்கான மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என அரசு சார்பில் கலந்துக் கொள்பவர்கள் அனைவரும் தமது மொழியிலேயே பேசலாம் என்று தெரிவித்தார்.
பிராந்திய மொழிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக இது இருந்தது. அடுத்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், அனைவரும் அவரவர் மொழியிலேயே பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்; உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை” என்று பேசியது சர்ச்சைகளை எழுப்பியது.
உள்துறை அமைச்சரின் இந்தி மொழி குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எந்தத் காலத்திலும், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பின்னணியில் அமித் ஷா, பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தை அரசியல் நோக்கர்கள் நோக்குகின்றனர்.
Also Read | திருப்பதி ஏழுமையான் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR