டெக்ஸாஸ் வெள்ளம்: சிகிச்சை பலனின்றி இந்திய மாணவி மரணம்

Last Updated : Sep 4, 2017, 11:48 AM IST
டெக்ஸாஸ் வெள்ளம்: சிகிச்சை பலனின்றி இந்திய மாணவி மரணம் title=

கடந்த 27-ம் தேதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வீசிய புயல் மற்றும் கனமழையால் ஹூஸ்டன் நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. 

கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத பெருமழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. 

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிகில் பாட்டியா, மற்றும் ஷாலினி சிங் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மீட்புபடையினரால் மீட்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நிகில் பாட்டியா கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஷாலினி சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 25 வயதான ஷாலினி சிங், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஏ&எம் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார். 

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐடிஎஸ் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஷாலினி சிங்,  இரண்டு வருட மேல்படிப்புக்காக கடந்த மாதம்தான் அமெரிக்காவிற்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

Trending News