ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த குடியிருப்பு ஒன்றிற்கு ரூ.3.8 லட்சம் மின்கட்டனமாக அம்மாநில் மின் நிர்வாகம் அறிவித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
தெலுங்கானாவின் ஐதராபாத்தில் தனி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்வருப்பா. போடுப்பால் பகுதியில் இருக்கும் ஸ்ரீநிவாச நகரில் இருக்கும் இவரது வீட்டிற்கு கடந்த மாதத்திற்கான மின் கண்டனம் ரூ.3,81,571 அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9-ஆம் நாள் முதல் ஜூன் மாதம் 10-ஆம் நாள் வரைக்குமான காலக்கட்டத்தில் இந்த வீட்டில் 40,059 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட மின் பயன்பாட்டிற்கு ரூ.379087 கட்டணம் மற்றும் ஜூன் 24-ஆம் நாளுக்குள் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அபராதமாக கூடுதல் ரூ.2403 இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தினை அறிந்த குடும்பத்தார் சம்பந்தப்பட்ட TSSPDCL அதிகாரியினை தொடர்புகொண்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பில் கட்டணமானது தவறுதலாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு மின் கண்டனமாக ரூ.134 (63 யூனிட் மின்சார பயன்பாடு) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்... தவறுதலாக குறிக்கப்பட்ட மின் குறியீட்டின் அளவு காரணமாகவே இந்த கட்டணம் வந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.