ICSE Board Result 2023 Update: இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) 12 ஆம் வகுப்புக்கான ISC முடிவுகளையும், 10 ஆம் வகுப்பிற்கான ICSE முடிவுகளை இன்று, மே 14ஆம் தேதி மாலை 3 மணிக்கு அறிவிக்கும். பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை நடந்த ஐசிஎஸ்இ தேர்வுகள் மற்றும் பிப்ரவரி 13 முதல் மார்ச் 31 வரை நடந்த ஐஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.
ICSE (Class 10th) and ISC (Class 12th) results will be declared today at 3 pm. pic.twitter.com/mq6KRjrwMU
— ANI (@ANI) May 14, 2023
தேர்ச்சி சதவீதம், தேர்வர்களின் எண்ணிக்கை, மாநில வாரியான மாணவர்களின் செயல்திறன் போன்ற விவரங்களையும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி முடிவு செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் ICSE மற்றும் ISC 2023 முடிவுகளை CISCE அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- cisce.org, DigiLocker மற்றும் SMS மூலமாகவும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
ICSE மற்றும் ISC 2023: தேர்வு முடிவுகள் CISCE ஆல் அறிவிக்கப்படும்
ICSE வாரியத் தேர்வுகள் 2023 CISCE ஆல் பிப்ரவரி 27 முதல் மார்ச் 29, 2023 வரை நடத்தப்பட்டது. இதற்கிடையில், ISC 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 13 முதல் மார்ச் 31, 2023 வரை நடைபெற்றது. இன்னும் சில மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க | வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ICSE முடிவுகள் 2023 இன்று, மே 14, 2023 அன்று மதியம் 3 மணிக்கு வெளியிடும் என வாரியம் உறுதி செய்துள்ளது. ICSE 10வது முடிவு 2023 அதிகாரப்பூர்வ இணையதளம்- cisce.org இல் அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்கள் ரோல் எண்ணைப் பயன்படுத்தி அதைச் சரிபார்க்க முடியும்.
ஆன்லைனில் வெளியிடப்பட்ட ICSE முடிவு 2023 தற்காலிகமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் கொடுக்கப்படும் அசல் மதிப்பெண் பட்டியலில்ல் உள்ள மதிப்பெண்கள் தான் இறுதியானது.
மேலும் படிக்க | CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ